;

Thursday 1st of October 2020 07:22:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்; ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்; ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!


50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைத்தல், வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஜி.சீ.ஈ. சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வித் தரத்தைக் கொண்ட ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

பலநோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்தது.

அவர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் அவர்களுக்கான பயிலுநர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நியமனம் செப்டெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு வருகின்றது என ஜனாதிபதி செயலகம் இன்று அறிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE