Thursday 25th of April 2024 08:48:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாலுள்ள சவாலும்!

புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாலுள்ள சவாலும்!


இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் செயல்வடிவம் எடுக்க ஆரம்பித்து ளள்ளது.உள்நாட்டில் மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைச்சுக்களையும் இராஜாங்க அமைச்சுக்களையும் தெளிவான திட்டமிடலுடன் தெரிவு செய்துள்ளதுடன் அதிக அதிப்தியின்றிய ஆட்சிக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது உறுதியான அரசாங்கத்தினை ஏற்படுத்துவதுடன் அதன் கடடமைப்பு விருத்திக்கான அணுகுமுறைகளையும் அதிகார அமைப்புக்கான செல்நெறிகளையும் உருவாக்கும உத்திகளை கொண்டதாக விளங்கும். வடக்கு கிழக்கப் பொறுத்து தனித்துவமான கொள்கை வகுப்பொன்றுக்கான முனைப்பு புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு;ளளது. தமிழ் தேசியக் கட்சிகளை புறம்தள்ளிய தமிழ் அரசியல் வாதிகளைக் கொண்ட அதிகாரக் கட்டமைப்பினை உருவாக்குவதாகவுள்ளது.இதற்கான புறச்சூழலை உருவாக்கும் விதத்தில் புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் தற்போது பதவி ஏற்றுள்ள அரசாங்கம் வகுக்கவுள்ள வெளியுறவுக் கொள்கை பொறுத்து பின்பற்றவுள்ள விடயத்தை தேடுவதாக அமையவுள்ளது.

முதாவது இலங்கையின் வெளியுறவுக்கான புதிய அமைச்சரவையின் செயலாளர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தினை நோக்குவது அவசியமானது. அதாவது இலங்கை இதுவரை பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் தென்னாசியா ஆசியான் மற்றும்’ ஆசியாவை மையமாகக் கொண்ட கொள்கை குறித்து கவனம் செலுத்தப் போவதாக ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது இலங்கை வெளியுறவுக் கொள்கை மேற்குலகை மையப்படுத்தியது. இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

இரண்டாவது இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்~ அவர்கள் இந்தியா தொடர்பில் வெளியிட்ட கருத்தினை அவதானிப்போம். அதாவது இந்திய-இலங்கைக் இடையிலு;ள இரு தரப்பு உறவுகளை முன்கொண்டு செல்வதற்கும் புரிந்துணர்வு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இந்தியா எமது நட்பு நாடு அதேபோன்று உறவ நாடுமாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் தான் பதவி ஏற்றதற்கு முதல் முதல் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது மேற்குறித்த உரையாடலில் உள்ள முக்கியத்துவத்தை பார்க்கும் போது தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பேண திட்டமிட்டுள்ளதை காணமுடிகிறது. புதிய இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் அதனையே உணர்த்தியிருந்தது. இது ஒரு வகை இராஜதந்திர உத்தியாகவே தெரிகிறது. புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு மட்டுNமு பதவி ஏற்ற பின்பு வெளிநாட்டு விஜயமாக அமைந்திருந்தது.அதனை இந்தியத் தரப்பும் கௌரவமாக கருதுகிறது. தமது நட்பு நாடு இலங்கை என்பதில் இந்திய முன்னாள் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ஹரிகரன் அவர்கள் அண்மைய உரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தது கவனிக்கத் தக்கதாகும். அதாவது இலங்கைக்கு சீன நட்பு நாடு என்பதை விட இந்தியாவின் நட்பு நாடு என்றடிப்படையில் இந்திய ஆட்சியாளர்களும் புலனாய்வுத் துறையினரும் நிர்வாகிகளும் செயல்படுகின்றனர். அதனை பலப்படுத்தும் வகையிலேயே இலங்கை பிரதமரது அண்மைக்கால உரையாடல்கள் அமைந்துள்ளன.

நான்காவது இரு நாடுகளும் மிக நெருக்கமான உறவை பின்பற்றுவதானது பிராந்திய மட்டத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்த வாய்புள்ளதாகவே தெரிகிறத. .குறிப்பாக இலங்கை -இந்திய நெருக்கம் பிராந்திய அரசியலில் ஏற்பட்டுவரும் முரண்பாடுகளை கடந்ததாக மாறுகின்றதை உணரமுடிகிறது. சீன-இந்திய போட்டியினால் தென்னாசியாவே அதிர்வடைந்துள்ள போது சீனாவின் நட்புக்குள் இருக்கும் இலங்கை இந்தியாவை கையாளும் கலையை தொடர் அரசியலாக பிரயோகித்துவருகிறத.கடந்த கால அரசாங்கம் போல் தற்போதைய அரசாங்கமும் இந்தியா பொறுத்த கொள்கையை சரிவர மதிப்பிட்டு கையாளுகையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதனை ஜனாதிபதி தேர்தல் காலத்திலே கண்டுகொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது.ரணில-மைத்திரி அரசாங்கத்தின் அணுகுமுறையில் தற்போதைய அரசாங்கம் செயல்படுவதென்பது பிராந்திய ரீதியில் அதிக முரண்பாடுகளை தவிர்க்க உதவுவதாகவே அமையும். கொழும்பு -புதுடில்லி நட்புறவானது பலமானதாக அமைவதென்பது சீன-இலங்கை உறவை மட்டுமல்ல கொழும்பு -வேசிங்டன் உறவையும் பாதிக்காத வரையில் நகர வாய்புள்ளது தெளிவாக புலப்படுகிறது.

ஐந்தாவது புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்ய முனையும் அல்லது முனையாது என்று கருதப்படும் மிலேனிய உடன்பாடு இந்திய- இலங்கை நட்பினால் தேவையற்றதாகவோ தெரிகிறது. அதாவது மிலேனிய உடன்பாடு தேவையோ இல்லையோ என்பது இந்திய -இலங்கை நட்புறவில் தங்கியுள்ளது.காரணம் இந்தியாவுக்கூடாக இலங்கை அமெரிக்காவை கையாள ஆரம்பித்துள்ளதை உணரமுடிகிறது. இந்தியாவில்லாத அமெரிக்கா இந்தோ-பசுபிக் உபாயத்தை அமுல்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது. அது மட்டுமன்றி சீனாவை எதிர்ப்பதிலும் இரு நாட்டுக்கும் ஓரே வகை உபாயம் உள்ளதென்பதனால் இலகுவில் இந்த உறவை தகர்த்துவிட முடியாது. இலங்கைக்கு அமெரிக்காவினது அணுகுமுறைகளை முடிபுக்கு கொண்டுவருவதே பிரதான நோக்கமாகும். ஜெனிவா அரங்கினையும் மனித உரிமை மற்றும் போர்க்குற்ற விடயங்களையும் களைவது பிரதான எண்ணமாகவுள்ளது. அதனை நோக்கிய நகர்வை இந்தியாவுக்கூடாக தீர்த்துக் கொள்வதே இலங்கiயின் அடுத்த இலக்காக அமையவுள்ளது.

ஆறாவது இத்தகைய இலங்கை-இந்திய உறவின் மத்திலும் இலங்கை- இந்திய- அமெரிக்க நட்புறவின் நெருக்கத்திலும் தமிழர் தரப்பு எவ்வாறு பிராந்திய சர்வதேச சக்திகளுடன் உரையாடப் போகிறது என்பதாகும். இத்தகைய சவாலை எதிர் கொள்வதே தற்போதைய தமிழர் தரப்பின் நெருக்கடியாகும். ஏறக்குறைய இலங்கை அரசாங்கம் தமிழர் அரசியலின் இயங்கு திறனை முற்றாகவே முடக்கியுள்ளதை காணமுடிகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முழுவதும் அத்தகைய முடக்கத்திற்கு தமிழர் தரப்பும் ஒத்துழைத்ததன் விளைவே தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகும்.இதிலிருந்து வெளிவருவதென்பது சாதரணமான விடயமாக தென்படவில்லை. ஒரு பக்கம் இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடிகள் மறுபக்கத்தில் பிராந்திய சர்வதேச சக்திகளை நெருங்க முடியாத போக்கு இரண்டுக்குள்ளும் தமிழர் தரப்பு அகப்பட்டுள்ளது.

எனவே இலங்கை -இந்திய நட்புறவு அதிகரிக்கும் போது தமிழர் தரப்புக்கு எல்லாத் தளத்திலும் பாதிப்பும் ஆபத்துமே காத்திருகிறது. இலங்கை -இந்திய தரப்பின் முரண்பாட்டுக்குள் பயணித்த அரசியல் காலம் முடிபுக்கு வந்துவிட்டது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தீர்க்கமாக ஆசியா சார்ந்ததாக வடிவமைக்கப்படப் போகிறது. அதில் இந்தியாவும் சீனாவும் சமதூரத்’தில் வைத்து கையாளப்படுமாயின் இலகுவில் பிராந்திய சர்வதேச அரசியல் இலங்கையின் கட்டுக்குள் வந்துவிடும். அதனை இந்திய தரப்பும் நம்பிக்கையோடு அரவணைக்கும். இத்தகைய போக்குக்கள் மத்தியில் இலங்கைத் தமிழரது அரசியல் வடிவமைப்பதென்பது கடினமான இலக்காக அமையவுள்ளது. பாராளுமன்றத்திற்கு புதிதாக பிவேசிக்கும் தரப்புக்களும் சரி அனுபவமுள்ள தரப்பும் சரி இத்தகைய நெருக்கடி பற்றி உரையாடுவதை விடுத்து பழைய கதைகள் பேசுகின்றதைக் காணமுடிகிறது. அது மட்டுமன்றி தமக்குள் மோதிக் கொள்வதுவும் பின்னால் இழுபட்டு வருகிறவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடு என்பது சரிவராது எனவும் பேசிக் கொள்வதை காணும் போது இதனால் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை.என்பது தெளிவாக தெரிகிறது.இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்பைக என்பது 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது வகுக்கப்பட்ட கொள்கை போன்று அமையாத வரையும் இலங்கைக்கு பாதுகாப்பனதாக அமையும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாலித கோகண அப்போது குறிப்பிட்டது போலவே தற்போது கொலம்பகே குறிப்பிடுவது உள்ளது. மீண்டும் அதே உபாயமாயின் தமிழருக்கான வாய்ப்பு திறக்கப்படும்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE