Friday 29th of March 2024 02:35:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
(2ம் இணைப்பு) 40ஆவது இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் சுசில் பிரேமஜயந்த!

(2ம் இணைப்பு) 40ஆவது இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் சுசில் பிரேமஜயந்த!


சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

கல்விச்‌ சீர்திருத்தங்கள்‌, திறந்த பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெற்ற புதிய அமைச்சரவைப் பதவிப்பிரமாண நிகழ்வில், 28 அமைச்சுகளை ஜனாதிபதி, பிரமர் உள்ளிட்ட 25 பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஏற்கனவே வர்த்தமானிப்படுத்தப்பட்ட அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பட்டியலுக்கு அமைய, 40 ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த தற்போது பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

முன்னைய செய்தி....

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்த இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (ஓகஸ்ட்-26) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE