;

Wednesday 21st of October 2020 07:04:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பது  கொரோனாவை விட ஆபத்தானது – ஜோன்சன்!

பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பது கொரோனாவை விட ஆபத்தானது – ஜோன்சன்!


சிறுவா்கள் பாடசாலைக்குச் செல்லாமல் முடங்கியிருப்பது கொரோனாவை விட ஆபத்தானது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று நோயை அடுத்து மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அடுத்த வாரம் திறக்கவுள்ள நிலையில் சிறுவா்கள் வகுப்பறையில் இருப்பதையும் நேரில் கற்றுக்கொள்வதையும் விட விலைமதிப்பற்றது எதுவும் இல்லை என்று பிரதமர் கூறினார்.

லீசெஸ்டர்ஷையரின் சில பகுதிகளில் சிறுவா்கள் நேற்று பாடசாலைக்குத் திரும்பிய நிலையில் கோல்வில்லில் உள்ள கஸில் ராக் பாடசாலைக்குப் பிரதமர் நேற்றுக் காலை சென்றார்.

வகுப்பறையில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அங்கு மாணவா்களுடன் பேசிய ஜோன்சன் தெரிவித்தார்.

இந்தப் பாடசாலை தொற்று நோய் நெருக்கடியை அடுத்து மூடப்பட்டு இப்போது 159 நாட்கள் ஆகின்றன.

உங்கள் உடல்நலத்திற்கு கோவிட்டிலிருந்து வரும் ஆபத்துக் குறைவானதே. புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

ஆனால் நீங்கள் இப்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து தொடர்ந்து பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பதுதான் எனவும் அவர் கூறினார்.

வகுப்பில் சிறுவர்களுக்குக் கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் முக்கியத்துவத்தை ஜோன்சன் சுட்டிக்காட்டினார். அந்த தருணம் முற்றிலும் ஈடுசெய்ய முடியாதது. அது விலைமதிப்பற்றது. இந்த அனுபவம் பாடசாலை வகுப்பறையில் மட்டுமே கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் முதல் பாதுகாப்பாகப் பாடசாலைக்குத் திரும்ப முடியும் என்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறுதியளிப்பதற்காக பிரதமர் பாடசாலைகளுக்குத் தொடர்ந்து சென்று விழிப்புணா்வை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

இதேவேளை, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள ஏற்கனவே பாடசாலைகள் திறக்கப்பட்டுக் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE