;

Thursday 24th of September 2020 07:50:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
வீடு புகுந்த கொள்ளையர்களால் மாமனார் கொலை: அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா!

வீடு புகுந்த கொள்ளையர்களால் மாமனார் கொலை: அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா!


வீடு புகுந்த கொள்ளையர்களால் மாமனார் கொலை செய்யப்பட்டதுடன் உறவினர்கள் படுகாயத்திற்குள்ளான சம்பவத்தை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம்வந்த சுரேஷ் ரெய்னா முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி ஓய்வை அறிவித்த கையோடு தானும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தடைப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் அமீரகம் சென்றிருந்தார் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா.

இவ்வாறு அங்கு சென்ற நிலையில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்காக 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 6வது நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சென்னை அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த பரபரப்பிற்கு மத்தியில் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா உடனடியாக அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன் காரணம் அறியமுடியாது குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், 'சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்புகிறார். அவர், 13-வது ஐபிஎல் ரி-20 தொடரில் முழுமையாக விளையாடமாட்டார். இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் சிஎஸ்கே அணி முழுமையாக வழங்கும்' எனத் தெரிவித்திருந்தார்.

இது மேலும் குழப்பத்தையும் காரணத்தை அறியும் ஆவலையும் அதிகப்படுத்தியது. சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்போம் என்று குறிப்பிட்டதன் காரணம் தற்போது வெளியான தகவல் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் (வயது-58). அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே தரியால் கிராமத்தில் அசோக் குமார் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

கடந்த 20-ம் தேதி அசோக் குமார் உள்பட அவரின் குடும்பத்தார் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் 4 பேரையும் தாக்கிவிட்டு பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் அசோக் குமாரின் 80 வயது தாய் சத்யா தேவி, மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின், கவுஷால் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

ஆனால், அசோக் குமாருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்றும், அவர் ரெய்னாவின் மாமா என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள சுரேஷ் ரெய்னாவுக்குத் தகவல் தெரிவி்க்கப்பட்டதால், அவர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வந்ததும் ரெய்னா தாரியால் கிராமத்துக்குச் செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பதான்கோட் காவல் கண்காணிப்பாளர் குல்நீத் சிங் குராணா கூறுகையில், 'அசோக் குமாரைக் கொள்ளையர்கள் தலையில் தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயத்துடன் தப்பிவிட்டனர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

அசோக் குமாரின் சகோதரர் கூறிய பின்பே அவர் ரெய்னாவின் மாமா எனத் தெரியவந்தது.

அசோக் குமார் வீட்டிலிருந்து ஏராளமான தங்க நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

அசோக் குமார் மனைவி மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். மற்றவர்கள் மருத்துவமனையில் உள்ளனர்' எனத் தெரிவித்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE