;

Wednesday 21st of October 2020 07:22:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரிட்டன் “லிபரல் டெமோக்ரடிக்” கட்சித் தலைவராக  தமிழர் ஆதரவாளர் எட் டேவி தெரிவு!

பிரிட்டன் “லிபரல் டெமோக்ரடிக்” கட்சித் தலைவராக தமிழர் ஆதரவாளர் எட் டேவி தெரிவு!


பிரிட்டன் - லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் தோ்தலில் பிரிட்டிஷ் தமிழ் சமூகத்தின் நீண்டகால ஆதரவாளரான சேர் எட் டேவி 63.5% வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

இலங்கைத் தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை நீக்குவதற்கும் ஆதரவாக எட் டேவி கடந்த காலங்களிர் செயற்பட்டவராவார்.

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக 2010 ஆம் ஆண்டில் இலங்கை ஜி.எஸ்.பி + சலுகையை இழந்தது.

எனினும் 2017 இல் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி + வரிச் சலுகை வழங்கப்பட்டது. இதற்கு அப்போது லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த எட் டேவி கடும் எதிா்ப்பு வெளியிட்டார்.

இலங்கை இனப்படுகொலை தொடா்பான நிலைப்பாடுகளில் எட் டேவி ஆரம்பத்தில் தயக்கங்களைக் கொண்டிருந்தாலும் இலங்கையில் நடந்த அட்டூழியங்கள் குறித்து மேலும் மேலும் ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் உண்மை நிலையை அவர் ஏற்றுக்கொண்டார்.

பிரிட்டனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் 11-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய டேவி, இந்த கொடூரமான, கொடூரமான சம்பவத்தையும் அதற்கு அதற்குக் காரணமாக பின்னணிகளையும் மறந்துவிட முடியாது. நீதிக்கான தேடலை நாம் முடிவுக்கு கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச சுயாதீன நீதி விசாரணைக்கான அழைப்பை தொடா்ந்து வலியுறுத்த வேண்டும் எனவும் அவா் தெரிவித்தார்.

போரின் இறுதி கட்டங்களில் பொதுமக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை யுத்த சூனிய வலயத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு அங்கு அவா்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற குற்றவாளிகள் அதற்குப் பொறுப்புக் கூறியே அக வேண்டும் எனவும் எட் டேவி வலியுறுத்திமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE