Monday 17th of May 2021 12:52:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்திய-இலங்கை நலன்களுக்குள் தமிழர்களின் அபிலாசைகள் சிதைந்து போகுமா?

இந்திய-இலங்கை நலன்களுக்குள் தமிழர்களின் அபிலாசைகள் சிதைந்து போகுமா?


புதிய அரசாங்கம் இந்தியா பற்றிய வெளியுறவை மிக நுணுக்கமாக கையாளும் வரைபை உருவாக்கிவருகிறது.அதில் தமிழ் மக்களது இனப்பிரச்சினை தொடர்பில் 13 சீர்திருத்தம்; அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது இலங்கை இந்திய உறவு தொடர்பானதும் இந்தியாவினது இலங்கை தொடர்பான கொள்கை சார்ந்ததாகவும் அமைந்திருந்தது. இது தற்போது காலவதியாகும் என்ற வாதம் இலங்கைப்பரப்பில் அதிக பேசுபொருளாகியுள்ளது. இக்கட்டுரையும் இந்தியா -இலங்கை உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் அதனை இலங்கை கையாள ஆரம்பித்துள்ள பாங்கையும் தமிழருக்குள்ள நெருக்கடியையும் தேடுவதாக அமைந்துள்ளது.

முதலாவது கடந்த 21.08.2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்து உரையாடினர். அதன் பின்பு கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா முயலும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து நிலை இலங்கைப்பரப்பில் ஏற்பட்டிருந்தாலும் இந்தியா தற்போது தான் 13 ஐ முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்திற்கு நெசருக்கடி கொடுக்கப் போவதென்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.அதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும் ஒரு காரணம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமாகும். இது உணர்த்தும் செய்தி இந்தியாவை தமிழருக்கு கையாளத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. ஆயதப் போராட்டத் தலைமைகளை குறைகூறும் தரப்புக்கள் மிதவாத தலைமைகளது அணுகுமுறையிலும் உள்ள தவறுகளை புரிதல் அவசியமானது. 2015 இல் பெற்ற வெற்றியை கொண்டு தமிழ் தலைமைகள் தற்போதைய அணுகுமுறையை பின்பற்றி இருந்தால் தமிழரது அரசியலில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கும். தற்போது கூட தமிழ் தரப்பில் ஒரு பிரிவினர் ஏன் இந்தியாவை அணுகுகிறார்கள் என்பதில் குழப்பம் உள்ளது.

இரண்டாவது இந்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி கேணல் ஹரிகரன் அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை அவதானிப்போம். இந்திய-பசுபிக் குவாட் பாதுகாப்பு அமைப்பு இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு புதிய பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும். இதைப் புரிந்து கொண்டு செயல்பட ராஜதந்திர உபாயங்களில் அனுபவம் மிக்க ராஜபக்~ சகோதரர்கள்’ முனைவார்கள். இந்தியா -இலங்கை நெருங்கிய நேச நாடு.ஏற்கனவே இந்திய -இலங்கை கடற்படை வீரர் தரத்தை உயர்த்த இந்தியாவிலுள்ள பயிற்சிக் கூடங்களை உபயோகிக்க ஒப்பந்தங்கள் செயல்பாடம்டில் உள்ளன. இந்த நிலை மேலும் தொடரும். இது இலங்கையின் கடல்வழிப் பாதுகாப்பினை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தவர் இன்னோர் கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்தியா ராஜதந்திர ரீதியில் இலங்கைக்குசு அழுத்தம் ஏற்கனவே கொடுத்துவருகிறது. இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக்; கடன்களுக்கு வட்டி கொடுக்கவே பெரும் நெருக்கடியை சந்தித்துவருகிறது.அதற்கு ஈட்டுக்கடன் அளிக்குமாறு இலங்கை தொடர்ந்து இந்தியாவை கேட்டுவருகிறது.இந்தியா அதற்கு பேச்சுவார்த்தை தொடர்டவதாக தெரிவித்துவருகிறது.ஆகவே தான் ராஜபக்ச சகோதர்கள் கெதாழும்பு முனையத்தினை இந்தியாவுக்கு அளிக்க முடியாதென திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இவற்றை தவிர சீன உதவியுடன் கொழும்பில் உருவாகிய பொருளாதார கேந்திரம் முடியும் தறுவாயிலுள்ளது. இந்திய வணிகப் புள்ளிகள் பெருமளவு பங்குபெற்றால் தான்’ அதனை இலாபகரமானதாக நகர்த்த முடியும். மேலும் இலங்கையில் தற்போது முடங்’கிப் போன சுற்றுலாப் பயணிகள் வருகையை உயிர்ப்பிக்க இந்தியா தேவை ஆகவே இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்’க பல்வேறு வழிகள் உள்ளன. அது இலங்கை அரமூசுக்கு தெரியும் என்றார்.

மூன்றாவது பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்து;ளள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த போதே மேற்படி பிரசன்னா குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சந்திப்பில் இருநாட்டுக்குமான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடனான சந்திப்பு எனவும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் இரு நாட்டுக்குமான புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

நான்கு கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் வளர்ச்சி தொடர்பாக இலங்கை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு நாடுகளுக்கிடையிலான ஓர் ஏற்பாடு என்பதால் ஜனாதிபதி அதனை ஏற்க உறுதிபூண்டுள்ளார். ஜனாதிபதியின் கொள்கை என்னவென்றால் எந்தவெரு நாட்டிற்கும் எந்தவெரு தேசியச் சொத்தும் முழுக்கட்டுப்பாட்டில் வழங்கமாட்டாது என்பதாகும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

ஐந்து இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராக மலிந்த மொறகொட நியமிக்கப்படுவதுடன் அவரது பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள நியமனமாக அமையுமென ஊடகப்பரப்பில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மலிந்த மொறகொட அமெரிக்காவின் நெருக்கமான நண்பர் மட்டுமன்றி பொருளாதாரத்திலும் கொள்கைவகுப்பிலும் அதிக முக்கியத்துவம் பெற்றவராக சமாதான பேச்சுவார்த்தைக் காலப்பகுதியில் விளங்கியுள்ளார்.ஏறக்குறைய சமாதான காலம் முழுவதும் அவரது நகர்வுகள் அரசாங்கத்தினது திட்டமிடலை நேர்த்தியாக சாத்தியப்படுத்த உதவியதாகவே விமர்சகரது மதிப்பீடு காணப்பட்டது.அது மட்டுமன்றி Pயவாகiனெநச குழரனெயவழைn அமைப்பின் இயக்குனராக பணிபுரியும் மலிந்த மொறக்கொட இதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிவருகின்றார். இவரே மாகாணசபை அமைப்பு முறைமை தேவையற்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பு எனவும் உள்@ராட்சி மன்றங்கள் மூலம் அதிகாரம் கைமாற்றலாம் எனவும் அண்மையில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இவரது அமெரிக்க- இந்திய உறவை பயன்படுத்திக் கொண்டு எதிர்கால நகர்வுகளை இலங்கை அரசாங்கம் கையாளப்போகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இங்கு இரண்டு பிரதான விடயங்கள் நிகழ்ந்து வருகிறது. ஒன்று இந்தியத் தரப்பின் அணுகுமுறைகள். அதாவது இந்தியா இலங்கையின் புதிய அரசாங்கத்தினை நேச நாடாக மட்டும் முதன்மைப்படுத்திக் கொள்வதுடன் அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சீனா சார்ந்து மட்டுமே இலங்கை விடயத்தை அதிகம் முதன்மைப்படுத்த முயலுகிறது. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குமுரணான நகர்வுகள் எதனையும் இலங்கை பின்பற்றக் கூடாது எனும் கொள்கையின் கீழ் செயல்படும் போக்கினைக் காணமுடிகிறது. இந்தியா பின்பற்றும் அணுகுமுறையினால் இலங்கைத் தமிழருக்கு தீர்வு எதனையும் வழங்க முடியுமா என்பது கேள்விக்குரிய அம்சமாகவே தெரிகிறருது. அது மட்டுமன்றி தீர்வினை இந்தியா தருவதென்ற எண்ணமே தவறானது. இலங்கைத் தமிழரது அரசியல் தலைமைகளும் அதன் நகர்வுகளும் தமிழரது தீர்வுக்கான நகர்வுகளாக அமையும் போது மட்டுமே இந்தியாவின் அழுத்தம் சாதகமான முடிபை நோக்கிய நகர்வுக்கு உதவுவதாக அமையும். ஆனால் இந்தியா தனது நலனை முதன்மைப்படுத்தியே செயல்படும் அது ஒன்றும் தவறானதோ பிழையானதோ கிடையாது. இந்தியா இந்தியர்களுக்கானது. அவர்களது நலன்களுக்கானது.

இரண்டாவது இலங்கை இந்தியாவை கையாறுளும் உத்தியை உருவாக்கிவருகிறது. குறிப்பாக கொழும்பின் கிழக்கு முனையம் பற்றி முரண்பாடு ஏற்பட்டதுடன் இந்தியாவுக்கு சாதகமாக பதிலளிக்க தயாராகிறது. அவ்வாறே பலாலியை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தெளிவான உத்தியை வகுக்க ஆரம்பித்துள்ளது. அதாவது இந்தியாவை திருப்திப்படுத்தம் முனைப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இதுவே கையாளுகையாகும். இது ராஜீக ரீதியில் கையாளுவதனைக் குறிப்பதாகும்.

எனவே இலங்கை இந்தியாவை கையாளவும் இந்தியா இலங்கையில் தமது நலன்களை நிறைவு செய்யவும் முனையும் ஒரு களம் ஒன்றினை அவதானிக்க முடிகிறது. இதில் எத்தரப்பு வெற்றி பெற்றாலும் தமிழர் தமக்கான வாய்ப்புக்களை தேடாத வரை எந்த தீர்வையோ மாற்றத்தையோ எட்டமுடியாது. அதனை புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னய தலைமைகளும் உணர வேண்டும். இரு நாடுகளது நலன்களுக்குள் தமிழரது அபிலாசை முற்றாக சிதைந்து போகுமா என்ற சந்தேகம் வலுத்துவருகிறது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE