Friday 29th of March 2024 06:01:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்!

பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்!


பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமரை பாராட்டுவதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் .

சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்தி பல்வேறு பிரதேச சபைகள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் தடுத்து முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.

இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்கு சென்றார்.

மலையகச் சைவத் தமிழ் மக்கள் மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள் கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் பசு வதைத் தடை முயற்சியை பாராட்டுகிறார்கள் போற்றுகிறார்கள்.

பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச முயற்சிப்பார் ஆனால் இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவர் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார் என்றுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE