Friday 19th of April 2024 04:23:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
2ம் கட்ட சோதனையில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கோவாக்சின்!

2ம் கட்ட சோதனையில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கோவாக்சின்!


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கோவாக்சின் முக்கயமான மனித சோதனையின் 2ம் கட்ட சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் எத்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து என சோதனை முடிவுகள் வந்துள்ளதையடுத்து இரண்டாம் கட்ட சோதனை தொடங்கியது.

ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.

இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்கள் கடந்து நலமுடன் இருப்பதால், இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்ல தகுதி பெற்றது கோவாக்சின் மருந்து. முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத்தில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை சோதனையில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

முதற்கட்ட சோதனையில் எந்த பக்கவிளைவும் இல்லாத மருந்து என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் நோய் எதிர்ப்பாற்றல் சோதனை செய்யப்படும். இரண்டாம் கட்ட சோதனையில் தடுப்பூசி முதல் நாளிலும், பிறகு 28-வது நாளிலும் இரண்டு முறை கொடுக்கப்படும்.

அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டவர்கள் 42 வது நாள், 56 வது நாள், 118 வது நாள் என 208 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். மொத்தம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள மனித உடல் சோதனையில், மூன்றாவது கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாக்பூரில், 50 தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் மருந்தை வழங்கினர். 50 பங்கேற்பாளர்களுக்கு நாங்கள் ஒரு டோஸ் வழங்கியுள்ளோம். இரண்டாம் கட்டத்தில், 750 பங்கேற்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இந்த கட்டத்திற்கு 12 முதல் 65 வயது வரையிலான தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் ”என்று டாக்டர் கில்லூர்கர் கூறினார்.

இந்த நிலையில் தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக் அதன் கொரோனா தடுப்பூசி கோவாக்சினின் விலங்குகளிடம் சோதனைகள் வெற்றிகரமாக இருப்பதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE