;

Thursday 24th of September 2020 08:41:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் ஆயிரத்து 114 பேர் உயிரிழப்பு!

இந்தியாவை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் ஆயிரத்து 114 பேர் உயிரிழப்பு!


உலகளாவிய ரீதியில் இந்தியாவில்தான் நாளாந்த தொற்று அதிகூடிய நிலையில் காணப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 114 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 8.00 மணிக்கு நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 ஆயிரத்து 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 47 இலட்சத்து 54 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை ஆயிரத்து 114 ஆக உள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 586 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 10 இலட்சத்து 37 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 29 ஆயிரத்து 115 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரபிரதேசத்தில் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 587 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 4 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 307 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 4 இலட்சத்து 97 ஆயிரத்து 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து 37 இலட்சத்து 2 ஆயிரத்து 595 பேர் வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 9 இலட்சத்து 73 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE