Friday 19th of April 2024 06:18:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுப்பேன்; முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர்! - கருணா அம்மான்!

தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுப்பேன்; முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர்! - கருணா அம்மான்!


"எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்."

- இவ்வாறு தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனூடாகத் தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும். இதனை ஓர் இனவாதமாக எவரும் பார்க்கக் கூடாது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புவழங்க வேண்டும்.

இன்று எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குச் சாட்டை அடி கொடுத்துள்ளனர். இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இந்தத் திட்டத்தை எமது புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ளத் தற்போது தீர்மானித்துள்ளோம். முதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களில் மக்களுக்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.

கடந்த காலத் தேர்தல்களின்போது சில தரப்பினர் சாராயப் போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரின் தோல்வியைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.

விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டமை வரவேற்கக் கூடியது. இது எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும். அந்தவகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவை விமர்சிக்க முடியாது. நாங்கள் சொல்கின்ற கருத்துக்களை அரசு ஏற்றுக்கொள்ளும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE