Friday 29th of March 2024 05:37:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே  கொரோனா;  மீண்டும் அடித்துக் கூறும்  சீன விஞ்ஞானி!

திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே கொரோனா; மீண்டும் அடித்துக் கூறும் சீன விஞ்ஞானி!


சீன அரசுக்கு சொந்தமான வுஹான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக அந்த நாட்டின் வைரஸ்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானி டாக்டர். லீ மெங் மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஹொங்கொங் பொது சுகாதார வைத்திய நிறுவனத்தின் வைரஸ்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் நிபுணராக பணியாற்றிய டாக்டர். லீ மெங் சீன அரசுதான் கொரோனா வைரஸ் பரவ சீன அரசே காரணம் என முன்னரும் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது அமெரிக்காவில் தலைமறைவாக உள்ள அவர், கடந்த 11 ஆம் திகதி அடையாளம் தெரியாத பகுதியில் இருந்து பிரிட்டனின் 'லூஸ் வுமன் ' என்ற நிகழ்ச்சிக்காக பேட்டியளித்தார். அதில் பல அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சீனாவில் பரவி வந்த புதிய வகையிலான நிமோனியா குறித்து இரண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். ஆய்வின் மோசமான முடிவுகள் குறித்து எனது மேலதிகாரியிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த மேலதிகாரி உலக சுகாதார மையத்தில் ஆலோசகராக இருப்பவர்.

அவரிடத்தில் சீன அரசு சார்பாகவும் உலக சுகாதார மையத்தின் சார்பாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினோன். ஆனால், வாயை பொத்திக் கொண்டு இருக்காவி்ட்டால் காணாமல் போய் விடுவாய் என்று மிரட்டினார் எனவும் டாக்டர். லீ மெங் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் சீன புத்தாண்டு விடுமுறை தொடங்கியது. உலகமெங்கும் சீன மக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால், உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயமும் இருந்தது. ஏனென்றால் , இது மிகவும் மோசமான ஒரு வைரஸ். உலக சுகாதாரத்தையே புரட்டி போட்டு விடும் திறமை கொண்டதாக இருந்தது. அதனால், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அப்படி, நான் அமைதியாக இருந்தால் உலக மக்களுக்கு தீங்கிழைத்தற்கு சமமாகும். இந்த நிலையில், சீனாவிலிருந்து தப்பி நண்பர்களுடன் `ஹொங்கொங் சென்றேன். மிரட்டல்கள் வந்ததையடுதது அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன் எனவும் அவா் கூறினார்.

வுஹானில் உள்ள விலங்குணவுச் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் உருவாகவில்லை. அது வௌவாலில் இருந்து உருவாக்கப்பட்டு ஆய்வக மாற்றத்துக்கு பிறகு கொரோனா வைரஸாக மாற்றப்பட்டது. CC45 மற்றும் ZXC41 என்றே இதற்கு பெயரிடப்பட்டிருந்தது.

ஜனவரி 17 - ஆம் ஆம் திகதி அமெரிக்காவில் வாழும் சீனாவை சேர்ந்த சமூக ஊடக பிரபலம் ஒருவரை தொடர்பு கொண்டு சீன அரசு கோவிட் -19 வைரஸை உருவாக்கியது குறித்து தகவல் தெரிவித்தேன் எனவும் டாக்டர். லீ மெங் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் மனிதரிடத்தில் மனிதருக்கு பரவும் என்பது அப்போதே சீனாவுக்கு தெரியும். கொரோனா வைரஸ் அதி தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன், இந்த வைரஸை பரப்புதற்கான ஒரு களமாக மட்டுமே வுஹான் விலங்குணவுச் சந்தை இருந்தது போன்ற வியங்களை அவரிடத்தில் விளக்கி கூறினேன்.

தற்போது வுஹானில் வைரஸ் உருவாக்கப்பட்ட விதம், பரவிய விதம் குறித்து இரண்டு அறிக்கைகள் எங்களிடத்தில் உள்ளன.

அந்த அறிக்கைகள் வுஹானில் வைரஸ் உருவாக்கப்பட்டற்கான அறிவியல் சான்றுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லும். உயிரியலில் எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் கூட கொரோனா வைரஸ் உருவத்தை வைத்தே உண்மையை அறிந்து கொள்ள முடியும்எனவும் டாக்டர். லீ மெங் தெரிவித்துள்ளார்.

வுஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் டாக்டர் லீ மெங் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, டாக்டர் லீ மெங்கின் குற்றச்சாட்டை ஏற்கெனவே சீனா மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE