Thursday 28th of March 2024 08:40:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் பாடசாலைகளுடன்  தொடர்புடைய கொரோனா தொற்று அதிகரிப்பு!

ஒன்ராறியோவில் பாடசாலைகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்று அதிகரிப்பு!


மார்க்கம் நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை வகுப்பறை ஒன்றில் மாணவா் ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்த வகுப்பறையைச் சோ்ந்த மாணவா்கள் அனைவரும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டு்ள்ளனர்.

மார்க்கம் - பர் ஓக் அவென்யூ பகுதியில் உள்ள லிட்டில் ரூஜ் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவரே அண்மையில் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டதாக யோர்க் பிராந்திய பொது சுகாதாரம் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாடசாலையுடன் ஒன்ராறியோ - கிரேட்டர் ரொரண்டோ பகுதியில் 9 பாடசாலைகளுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் இதுவரை 19போ் தொற்றுக்குள்ளாகிக் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஹால்டன், யோர்க் மற்றும் டர்ஹாம் பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்ட நிலையில் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட வகுப்பறை மாணவா்கள், ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மிசிசாகாவில் உள்ள சென்.ஜோசப் கத்தோலிக்க மேல்நிலைப் பாடசாலையில் ஒரு மாணவர், ஓக்வில்லில் உள்ள சென். மார்குரைட் டி யூவில் கத்தோலிக்க தொடக்கப்பள்ளியில் பணியாற்றிய ஒருவா், மிசிசாகாவில் உள்ள பிரையர்வுட் பாடசாலையில் பணியாற்றும் ஊழியர், பிராம்ப்டனில் உள்ள பீல் மாவட்ட பள்ளி வாரியத்தின் அலுவலகத்தல் ஒருவா் மற்றும் பிராம்ப்டனில் உள்ள ரோஸ் டிரைவ் பாடசாலை பணியாளர் ஒருவா் என பாடசாலைகளில் பல தொற்று நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

டொராண்டோவில் ப்ளூடேல் பாடசாலை, சார்லஸ் ஜி.ப்ரேசர் ஆரம்ப பாடசாலை, டான் மில்ஸ் நடுநிலைப்பள்ளி, ஏர்ல் ஹெய்க் மேல்நிலைப் பள்ளி மற்றும் புரூக்ஹவன் பொதுப் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு பணியாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமையும் உறுதி செய்யப்பட்டது.

ஒன்ராறியோ முழுவதும் செப்டம்பர் ஆரம்பத்தில் இருந்து பாடசாலைகளுடன் தொடர்புடைய 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளனர்.

இவா்களில் இதில் 9 மாணவர்கள், 14 ஊழியர்கள் மற்றும் பாடசாலைகளுடன் தொடர்புடைய 6 பேர் அடங்குகின்றனர்.

இந்நிலையில் சமூகத்தில் தொற்று நோய் குறைந்தால் மட்டுமே பாடசாலைகளுடன் தொடர்புடைய தொற்று நோய்களும் குறையும் என மாகாணக் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் எங்கள் பங்கைச் சரியாகச் செய்ய வேண்டும். பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இணைய வழியில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கிரோட்டர் ரொரண்டோ பகுதியைச் சேர்ந்த மாணவா்களின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE