;

Thursday 24th of September 2020 08:37:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
2022 வரை கொரோனா அற்ற இயல்பு  வாழ்வை உலகம் எதிர்பார்க்க முடியாது!

2022 வரை கொரோனா அற்ற இயல்பு வாழ்வை உலகம் எதிர்பார்க்க முடியாது!


கொரோனா தொற்று நோய்க்கு முன்பு இருந்தது போன்றதொரு இயல்பு வாழ்க்கையை 2022 ஆம் ஆண்டுவரை உலகம் எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்து இணைய நேரலையில் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி ஒன்றுக்கான உடனடிச் சாத்தியங்களைக் காணமுடியவில்லை. அவ்வாறு ஒரு சாத்தியமான தடுப்பூசி கிடைத்தால் கூட இன்னும் நீண்ட காலத்துக்கு சமூக இடைவெளி பேணுதல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடரவேண்டியிருக்கும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய் பாரியவில் குறைய வேண்டுமானால் உலகில் 60 முதல் 70 வீதமான மக்கள் கொரோனாவுக்கு எதிரான இயல்பான நோயெதிர்ப்பு சக்தியைப் பெற வேண்டும். இதற்கு நீண்ட காலம் ஆகலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் எவ்வளவு காலம் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்பதும் எங்களுக்குத் தெரியாது - இது மற்றுமொரு பெரிய கேள்விக்குறி. தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்? என்பது குறித்தும் சந்தேகங்கள் உள்ளன. எனவே, மீண்டும் – மீண்டும் குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள நேரலாம் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE