;

Thursday 24th of September 2020 07:42:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
நல்லூர் பிரதேச சபைக்குள் புகுந்து செயலாளர் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது!

நல்லூர் பிரதேச சபைக்குள் புகுந்து செயலாளர் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது!


நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள கடை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரதேச சபைக்குள் சென்று முரண்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திடீரென பிரதேச சபைச் செயலாளரை தாக்கியுள்ளார். தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம்ஒப்படைத்தனர். சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளன நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமை நேரத்தில் அரச ஊழியரை அலுவலகத்தில் உட்புகுந்து தாக்கிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதர்கான நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இச் சம்பவத்தினை தாங்கள் வன்மையாக கண்டித்துள்டள நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள், இவ்வாறான சம்பவம் இனிமேல் இடம்பெறக் கூடாது எனவும் அவர் எவ்வாறான அரசியல் செல்வாக்கினை கொண்டிருந்தாலும் அவருக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அத்தோடு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE