Tuesday 23rd of April 2024 10:47:53 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ். பனை சார் உற்பத்தி பொருட்களை  கனடாவில் சந்தைப்படுத்த நடவடிக்கை!

யாழ். பனை சார் உற்பத்தி பொருட்களை கனடாவில் சந்தைப்படுத்த நடவடிக்கை!


யாழ். மாவட்டத்தின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை கனடாவில் சந்தைப்படுத்தக்கூடிய அங்கு இரு கற்பகம் விற்பனை மையங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்தி பத்திராயா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற பனை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் 5000 கிலோ பனம் கட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பத் தேவைப்பட்டது. எனினும் 2000கிலோ பனம் கட்டியே எமக்குக் கிடைத்தது.

யாழ்ப்பாண பனை உற்பத்திப் பொருட்களுக்கு தெற்கில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் சிறந்த கேள்வி நிலவுகின்ற நிலையில் குறித்த துறையை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு அனைவரும் தமது சொந்தத் துறையாக பனைக் கூட்டுறவைக் கருதி முன்னேற்ற வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

பனை உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு அரசாங்கம் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் நீர்கொழும்பில் புதிய கற்பகதருக் கடைத் தொகுதி திறக்கப்பட உள்ளது எனவும் அவா் குறிப்பிட்டாா்.

அங்கு கருத்துத் தெரிவித்த பனம் உற்பத்தியாளர்கள், அரசாங்கம் கித்துள் உற்பத்திக்கு மானியம் வழங்குகிறது பனம் உற்பத்திக்களுக்கு மானியம் வழங்குவதில்லை.

இதனால் பனை உற்பத்தியாளர்கள் தொழில் நீதியான நெருக்கடிகளுக்கும் வாழ்வாதார நீதியான நெருக்கடிகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்..

அதுமட்டுமல்லாது கித்துள் உற்பத்திகளுக்கு வரிவிலக்கை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன் பனை உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் வரி அறவிடுகின்றது.

இலங்கை மது வரி சட்டத்தில் கித்துள் பாணி உள்ளடங்காத போதிலும் பதநீர் மதச் சட்டத்தில் உள்ள ஏற்கப்பட்டுள்ளது.

பனையில் இருந்து எடுக்கப்பட்ட பதநீரானது 11மணித்தியாலத்திற்கு பின்னரே மதுவாக மாறுகின்ற நிலையில் மருத்துவ குணங்கள் உடைய இயற்கை பானமாக பலரும் இதை அருந்துகிறார்கள்.

ஆகவே அரசாங்கம் பனை உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் பட்சத்தில் குறித்த உற்பத்தி துறையை வீழ்ச்சி அடையாமல் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: கனடா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE