Friday 19th of April 2024 08:07:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
200 ஆவது ஆண்டு நிறைவில் போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை: விசேட திருப்லியுடன் மடு திருத்தலத்தில் அனுட்டிப்பு!

200 ஆவது ஆண்டு நிறைவில் போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை: விசேட திருப்லியுடன் மடு திருத்தலத்தில் அனுட்டிப்பு!


போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு விழாவும் விசேட திருப்பலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை(19) காலை 11 மணியளவில் மன்னார் மடுத்திருத்தலத்தில் இடம் பெற்றது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்று அமலமரித்தியாகிகள் சபையின் யாழ் மாகாண முதல்வர் எட்வின் வசந்தராஜ், திருக்குடும்ப சபையின் துணைக்குருக்களான அருட்தந்தை நிக்கலஸ், அருட்தந்தை ரஞ்சித் அன்ரனி தலைமையில் ஏனைய துனை குருக்களின் பங்கு பற்றுதலுடன் கூட்டுத்திருப்பளியாக இரு மொழிகளிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

போர்டோவின் திருக்குடும்ப சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு செய்யப்படுவதுடன் மூன்றாம் நூற்றாண்டில் வெற்றிகரமாக கால் பதித்து தங்களுடைய நோக்கத்தை தொடர்ந்தும் நிறைவேற்ற மூன்றாம் நூற்றாண்டி கால்பதிக்கின்றோம் என்ற தொணிப் பொருளில் நன்றியின் விழாவாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் வடமாகாணம் மற்றும் தென் மாகணத்தை சேர்ந்த திருக் குடும்பத்தவர்கள் முறையே அப்போஸ்தலிக்க அருட் சகோதரிகள், தியான யோக சகோதரிகள், திருமடசார்பற்ற சகோதரிகள், பொது நிலையினர், துணைக்குருக்கள், திருக் குடும்ப இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்றதுடன் விசேட நடை பவனியூடாக மடு அன்னை ஆலயத்திற்குள் வருகை தந்து நன்றி திருப்பலியில் இணைந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

அதே நேரத்தில் யாழ்பாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த திருகுடும்ப கன்னியர் சபை சகோதரிகள் 600 மேற்பட்டவர்கள் இலங்கை முழுவதும் கல்வி ஆன்மீகம் சமூக சேவை போன்ற பல தாரப்பட்ட பணிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடதக்கது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE