Thursday 18th of April 2024 06:59:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்காவில் ரிக்-ரொக் தடையைத் தவிர்க்க இறுதிநேர ஒப்பந்தம் கைச்சாத்து!

அமெரிக்காவில் ரிக்-ரொக் தடையைத் தவிர்க்க இறுதிநேர ஒப்பந்தம் கைச்சாத்து!


சீனாவின் ரிக்-ரொக் செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடை இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்துக் கவைிடப்பட்டது.

அமெரிக்க நிறுவனங்களான ஓரக்கில் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுடன் ரிக்-ரொக் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு தனது ஒத்துழைப்பு இருப்பதாக ஜனாபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ரிக்-ரொக் மற்றும் வி-சார்ட் செயலிகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

ரிக்-ரொக் சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் சீனாவிடம் வழங்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டால் தடையைத் தவிர்க்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்தே இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் ரிக்-ரொக் செயலிக்கான தடை தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தப் புதிய ஒப்பந்ததம் குறித்து `பைட் டான்ஸ்` நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த ஒப்பந்தத்திற்குச் சீனாவின் ஒப்புதல் தேவை.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதால், ரிக்-ரொக் க்ளோபல் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும். அந்த நிறுவனத்தில் பெரும்பாலும் அமெரிக்கர்கள் பணிப்பாளர்களாக இருப்பார்கள். ஒரு அமெரிக்க நிர்வாக இயக்குநர் மற்றும் பாதுகாப்பு நிபுணரும் அந்த குழுவில் இருப்பர்.

மேலும் ரிக்-ரொக்கின் தகவல்கள் ஓரக்கில் நிறுவனத்தால் சேகரித்து வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE