Saturday 20th of April 2024 06:24:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைக்கு மஞ்சள், கடலட்டை கடத்த முயன்ற மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது!

இலங்கைக்கு மஞ்சள், கடலட்டை கடத்த முயன்ற மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது!


இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் இந்திய மெரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றள்ளது.

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் அடங்கிய 22 மூடைகளை இந்திய மெரைன் போலீசார் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக இந்திய மெரைன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குந்துக்கால் கடற்கரையில் நேற்று காலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பாம்பன் குந்துகால் கடலில் பைபர் நாட்டு படகு ஒன்று இயந்திரப் பழுதாகி நின்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் இருந்த மெரைன் போலீசார் படகில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தியத்தில் மீனவர்கள் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்துள்ளனர். இதனால்;, சந்தேகம் அடைந்த போலீசார் படகில் ஏறி சோதனை மேற்கொண்ட போது, இலங்கைக்கு கடத்துவதற்காக 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவை படகில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

மீனவர்களிடம் மெரைன் போலீசார் நடத்திய விசாரணையில் இந்தப் படகில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகளும், சமையல் மஞ்சளும் கடத்தி செல்வதற்காக படகில் எடுத்து சென்ற போது நடுவழியில் எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றதாகவும்; தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று மீனவர்களை கைது செய்ததுடன், படகு அதிலிருந்த கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 22 மூடைகளில் சுமார் 800 கிலோ கடல் அட்டைகளும், 400 கிலோ மஞ்சளும் இருந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சளின் சர்வதேச மதிப்பு இந்திய பெறுமதியில் சுமார் 20 லட்சம் இருக்கலாம் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை மன்னார் உள்ளிட்ட பகதுிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோமாக கொண்டுவரப்படும் மங்சள் இலங்கை பொலிசார் மற்றும் கடற்படையினரால் கைப்பெற்றப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE