Tuesday 16th of April 2024 11:44:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
O/L பரீட்சார்திதகளுக்கான விசேட கருத்தரங்கு திருகோணமலையில் நடைபெற்றுள்ளது!

O/L பரீட்சார்திதகளுக்கான விசேட கருத்தரங்கு திருகோணமலையில் நடைபெற்றுள்ளது!


திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்று (21) கோமரங்கடவல மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 220 மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றமை விசேட அம்சமாகும்.

அதேபோன்று இவ்வலயத்திலுள்ள மூவின மாணவர்களுக்கும் இதன்போது கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் இந்த செயற்பாடு கிழக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி. முத்துபண்டா, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, கோமரங்கடவல பிரதேச சபை தலைவர் சந்தன விஜிதகுமார, கோமரங்கடவல பிரதேச செயலாளர் எஸ். எம். சீ. சமரக்கோன் அரசியல் பிரமுகர்கள், அரசஅதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் மதவாச்சி வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுடைய அடைவு மட்டத்தை விருத்தி செய்யும் நோக்கில் செயலமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதனையும் பார்வியிட்ட கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அங்கும் மானவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளித்தார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE