Thursday 28th of March 2024 04:43:29 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்காவில் கொரோனா பலி கிடு கிடு உயர்வு: 2 இலட்சத்தைக் கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா பலி கிடு கிடு உயர்வு: 2 இலட்சத்தைக் கடந்தது!


அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய்க்குப் பலியானவா்களின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து இன்று திங்கட்கிழமை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலகில் அமெரிக்காவை அடுத்து இரண்டாவது அதிக தொற்று நோயாளா்களைக் கொண்டுள்ள இந்தியாவை விட அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகும்.

அண்மைய வாரங்களாக அமெரிக்காவில் கொரோனாவுக்குப் பலியாவேர் தொகை நாளொன்றுக்கு சராசரி 800 போ் என்ற அளவில் உள்ளது.

கடந்த ஏபரல் 15 ஆம் திகதி ஒருநாள் இறப்பு எண்ணிக்கை 2,806 ஆகப் பதிவாகியிருந்தது. ஏப்ரலில் சராசரி தினசரி இறப்பு எண்ணிக்கை 2000 க்கும் அதிகமாகப் பதிவானது. அதனுடன் ஒப்பிடுகையில் சராசரி நாளாந்த இறப்பு எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது.

தொற்று நோயின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தொற்று நோயால் அதிகபட்சம் 2 இலட்சம் போ் வரை இறக்கலாம் எனக் கருதப்பட்டது.

எனினும் அங்கு தொற்று நோயின் தீவிரம் இன்னமும் சற்றும் குறையாத நிலையில் இறப்பு எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா இறப்புக்கள் அதிகமானதற்கு ஜனாதிபதி ட்ரம்பின் முறையற்ற நடவடிக்கைகளே காரணம் என எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சுகாதார வல்லுநர்களின் பரிந்துரைகளை ஜனாதிபதி ட்ரம்ப் கேட்க மறுப்பதே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் முகக்கவசம் அணிவது தொடர்பான பரிந்துரையில் அவர் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் மற்ற நாடுகளை விட அதிக அளவிலான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால்தான் அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ளதாக ட்ரம்ப் பதில் அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE