Thursday 25th of April 2024 04:25:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசிரியர்கள் நிரம்பல் நிலையில் உள்ளனர்; பரம்பலே காணாது! கல்வி அமைச்சின் செயலாளர்!

ஆசிரியர்கள் நிரம்பல் நிலையில் உள்ளனர்; பரம்பலே காணாது! கல்வி அமைச்சின் செயலாளர்!


வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் நிரம்பல் நிலையில் இருப்பதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தின் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி கலந்துரையடாப்பட்டது. வவுனியா தெற்கு வலயத்தில் 23 ஆசிரியர்களும், வடக்கு வலயத்தில் ஆரம்பகல்வி ஆசிரியர்கள் 145 பேரும், ஏனைய சில பாடங்களுக்கான ஆசிரியர்களின் வெற்றிடங்களும் நிலவுவதாக வலயக்கல்விப்பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையை பொறுத்தவரை வடக்குமாகாணத்திலேயே அதிகமான ஆசியர்கள் உள்ளனர். குறிப்பாக இலங்கையில் 21மாணவர்களிற்கு, ஒரு ஆசிரியர் இருக்கும் நிலையில் வடக்கில் 12 மாணவர்களிற்கு ஒரு ஆசிரியர் இருப்பதாக ஆளுனரால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்..வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் நிரம்பல் நிலையில் இருக்கிறது.அது 98 வீதமாக இருக்கும் நிலையில் பரம்பல் நிலையே பிரச்சனையாக இருக்கிறது.இவற்றை நிவர்த்திசெய்வதற்கு இறுக்கமான ஆசிரியர் இடமாற்றக்கொள்கையினை உள்வாங்குவதுடன், சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் தொகுதிப்பாடசாலைகளை அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கு ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE