Friday 19th of April 2024 12:21:13 PM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய  270 திமிங்கலங்கள்; இதுவரை  90  உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய 270 திமிங்கலங்கள்; இதுவரை 90 உயிரிழப்பு!


அவுஸ்திரேலியாவின் - டாஸ்மேனியா கடற்கரையில் சுமார் 270 திமிங்கலங்கள் நேற்று திங்கட்கிழமை கரையொதுங்கிய நிலையில் அவற்றில் 90 வரையானவை இதுவரை இறந்துவிட்டன.

கரையேறி உயிருக்குப் போராடிவரும் மேலும் பல திமிங்கலங்கள் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மேனியா தீவின் மேற்கு கடற்கரையில் நேற்றுத் திங்கட்கிழமை பெருமளவில் திமிங்கலங்கள் கரையொதுங்கின.

இவ்வாறு ஒதுங்கய 270 வரையான திமிங்கலங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்துவிட்ட நிலையில் ஏனையவற்றைக் காப்பாற்றும் நடவடிக்கையில் கடல் உயிரியலாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இந்தத் திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் பெருமளவில் கரையொதுங்கியமைக்கான காரணங்கள் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை.

டாஸ்மேனியா கடற்பகுதிகள் திமிங்கலங்களுக்குப் பெயர்போனவை. ஆனால் பெரியளவில் திமிங்கலங்கள் ஒரேயடியாகக் கரையொதுங்கியதை கடந்த 10 வருடங்களில் காண முடியவில்லை என உயிரியலாளா்கள் தெரிவிக்கின்றனர்.

கடைசியாக 2009 இல் சுமார் 200 திமிங்கலங்கள் இவ்வாறு டாஸ்மேனியா பகுதிகளில் கரையொதுங்கின.

இதேவேளை, தற்போது கரையொதுங்கிய திமிங்கலங்கள் பல அணுக முடியாத இடங்களில் உள்ளன. இதனால் மீட்புக் குழுவினர் அவற்றை மீட்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சுமார் 40 பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறிய எண்ணிக்கையிலான திமிங்கலங்களை மீட்டு அவற்றை மீண்டும் ஆழமான கடலில் விட்டதாக வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் கிரிஸ் கார்லியன் கூறினார்.

கரையொதுங்கில திமிங்கலங்கள் தண்ணீரில் சிறப்பாகச் செயற்பட்டால் அடுத்த கட்டமாக ஏனைய திமிங்கலங்களையும் மீட்டு விரைவாக கடலில் விட்டுவிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

வலுவான அலை ஒன்றின் காரணமாக இந்தத் திமிங்கலங்கள் கரையொதுங்கியிருக்கக்கூடும் என நம்புவதாக டாக்டர் கார்லியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கரையொதுங்கியுள்ள திமிங்கலங்கள் ஏழு மீட்டர் வரை நீளம் கொண்டவ. மூன்று தொன் வரை எடையுள்ளவை.

முடிந்தளவு விரைவில் கரையொதுங்கி உயிருடன் உள்ள திமிங்கலங்களை மீட்டுக் கடலில் சேர்ப்பிப்போம் என டாக்டர் கார்லியன் கூறினார்.

இந்த வகை திமிங்கலங்கள் கடற்கரையில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உயிர்வாழக் கூடியவை என முன்பு இவ்வாறான திமிங்கல மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலங்கள் ஏன் இவ்வாறு பெருமளவில் கரையொதுங்குகின்றன? என்பதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சுற்றியுள்ள பல்வேறு வகையான திமிங்கலங்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவகாலங்களில் ஏனைய விலங்குகளைப் போன்றே இடம்பெயர்கின்றன.

இவ்வாறு இடம்பெயரும்போது ஒரு தலைவரைப் பின்பற்றி பெருமளவு திமிங்கிலங்கள் நகர்கின்றன.

இவ்வாறான ஒரு இடம்பெயரர்வின்போது ஏற்பட்ட சில தவறுகளால் சமூப் பிணைப்புக்கொண்ட திமிங்கிலங்கள் இவ்வாறு ஒரேயடியாகக் கரையொதுங்கியிருக்கலாம் என கருத இடமுள்ளதாக டாக்டர் கார்லியன் கூறினார்.

2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் இவ்வாறு பெருமளவு திமிங்கலங்கள் கரையொதுங்கின. இங்கு ஒரு வார காலப்பகுதியில் சுமார் 200 திமிங்கலங்கள் உயிரிழந்தைமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE