Thursday 28th of March 2024 10:51:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
கோவிட்-19 சுகாதார  வழிகாட்டல்களை  பேண அறிவுறுத்தும் ரோபோ நாய்!

கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களை பேண அறிவுறுத்தும் ரோபோ நாய்!


பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சமூக இடைவெளி போணாதவா்கள், முக கவசம் அணியாதவா்களைக் கண்டறித்து அவா்களை அறிவுறுத்தும் ரோபோ நாய் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்பொட் (Spot) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ நாய் பரீட்சார்த்தமாக சிங்கப்பூரில் உள்ள பிஷன் பூங்காவில் நேற்று களமிறக்கப்பட்டது.

இரண்டாவது சுற்று சோதனையில் உள்ள இந்த ரோபா நாயை சிங்கப்பூரின் தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks), ஸ்மார்ட் நேஷன் மற்றும் அரச டிஜிட்டல் குழு ஆகியன இணைந்து தயாரித்துள்ளன.

தானியங்கி உணர்திறன் செயற்பாட்டுத் தொகுப்பு மற்றும் கமராக்களின் உதவியுடன் சமூக இடைவெளி பேணாதவர்களை இந்த ரோபோ நாய் அடையாளம் காண்கிறது. அத்துடன் முக கவசம் அணியாதவா்களையும் இனங்கண்டு அறிவுறுத்துகிறது.

இரண்டாவது சுற்று சோதனையில் இந்த ரோபோவின் செயற்திறன்கள் சிறப்பாக உள்ள நிலையில் சில மேம்பாடுகளுடன் விரைவில் இந்த ரோபோ சிங்கப்பூரில் பொது இடங்களில் சேவைக்கு வரவுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE