Monday 15th of April 2024 11:01:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
20 ஆவது திருத்தம் ஜனநாயகத்தக்கு குழிபறிப்பதுடன் ஊழல்-மோசடிகளுக்கே வழிவகுக்கும்! - கஜேந்திரன் எம்.பி.!

20 ஆவது திருத்தம் ஜனநாயகத்தக்கு குழிபறிப்பதுடன் ஊழல்-மோசடிகளுக்கே வழிவகுக்கும்! - கஜேந்திரன் எம்.பி.!


அரசியலமைப்பின் 20-ஆவது திருத்தச் சட்டம் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய நிதி மோசடிகளும் ஊழல்களும் இடம்பெறுவதற்கே வழிவகுக்கும். அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

எனவே 20ஆம் திருத்தம் நிறைவேற்றப்படக்கூடாதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

20-ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது இன்றைய பாராளுமன்ற உரையின் சுருக்கம் வருமாறு,

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 148 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றமானது பகிரங்க நிதிகளின் மீது பூரண கட்டுப்பாட்டினை கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டயோசனையின் பிரகாரம் பாராளுமன்றம் அந்த அதிகாரத்தினை முற்றாக இழக்கின்றது.

இந்நிலையானது நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்.

19வது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 41 ஆ வின் பிரகாரம் கணக்காய்வு சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள 20 ஆம் திருத்த யோசனையின் பிரகாரம் அது முற்றாக நீக்கப்படுகின்றது.

உறுப்புரை 153 (1) இன் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் தகமை பெற்ற கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் புதிதாகவரவுள்ள 20ஆம் திருத்தச் சட்டயோசனையின் பிரகாரம் தகமை பெற்ற கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை 153 (4) இன் பிரகாரம் அரசியல் அமைப்புப் பேரவையின் விதப்புரையின் பிரகாரம் கணக்காய்வாரள நாயகம் ஒருவரை சனாதிபதி நியமிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிதாகவரவுள்ள 20ஆம் திருத்தயோசனையில் ஆரசியுலமைப்புப் பேரவையின் எந்தவொரு விதப்புரையும் இன்றி சனாதிபதி ஆளொருவரை நியமிக்கலாம் என்றவாறு மாற்றப்பட்டுள்ளளது.

உறுப்புரை 154 (1) இன் பிரகாரம் அரச திணைக்களங்களதும் சனாதிபதி செயலாளர் அலுவலகத்தினதும் சனாதிபதி செயலாளர் அலுவலகம், பிரதம அமைச்சரது செயலாளர் அலுவலகம் என்பவற்றின் கணக்குகளை கணக்காய்வு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய 20 ஆவதுதிருத்தச் சட்டயோசனையில் சனாதிபதி செயலாளர் அலுவலகம், பிரதம் அமைச்சரது செயலாளர் அலுவலகம் என்பன நீக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை 154 (2) இல் அரச கம்பனிகளின் கணக்குகளை கணக்காய்வு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய 20 ஆவது யோசனையில் குறித்த அரச கம்பனி என்பது நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயகத்தில் பொறுப்புக்கள் அதிகாரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ச.தொ.ச நிறுவனம், அரச கம்பனிகளில் 50 வீத்திற்கும் அதிகமான பங்குகளை அரசு உடமையாகக் கொண்டுள்ளது. இந்நநிலையில் இவ்வாறான செயற்பாடானது பாரிய ஊழல் மோசடிகளுக்கே இட்டுச் செல்லும்.

உறுப்புரை 154 (ஏஐ) இன் பிரகாரம் பகிரங்க கணக்குகளை கணக்காய்வு செய்து பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிற்பிக்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் 20ஆம் திருத்தயோசனையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாட்டில் பாரியநிதிமோசடிகளும் ஊழல்களும் இடம்பெறுவதற்கே வழிவகுக்கும். ஆத்துடன் நாட்டில் ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது எனவே 20ஆம் திருத்தம் நிறைவேற்றப்படக் கூடாதென வலியுறுத்துகின்றோம்.

மேலும் வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் எட்டு தொடக்கம் 10 வருடங்கள் கடமையாற்றியுள்ளபோதும் அவர்களுக்கான இடமாற்றங்கள் பலருக்கு வழங்கப்பட்வில்லை. இதன் காரணமாக விரக்தியடைந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் மன்னார் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனவே கடமையாற்ற வேண்டிய காலத்தை நிறைவு செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு நடடிவக்கை எடுக்க வேண்டுமென விநயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அம்பாறை மாவமட்டம் கல்முனை தமிழ் பிரிவுக்கு இன்னமும் கணக்காளர் நியமிக்கப்படவில்லை. அதன் காணரமாக தமிழ் மக்கள் பாரிய இடர்களை எதிர் நோக்குகின்றனர். எனவே உடனடியாக கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் ஒருவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE