;

Friday 30th of October 2020 04:44:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
மர்மமான முறையில் உயிரிழந்திருந்த மாணவி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது!

மர்மமான முறையில் உயிரிழந்திருந்த மாணவி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது!


O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்ப்பட்டிருந்தார். குறித்த சிறுமியின் மரணம் கொலைச் சம்பவம் என தற்போது தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட - பின்னவலவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை பாடசாலை மாணவி (வயது-16) ஒருவர் வீட்டில் சடலம் மீட்கப்பட்ட்டிருந்தார்.

இதையடுத்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் குறித்த சிறுமி மட்டுமே இருந்துள்ள நிலையில் அப்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE