;

Sunday 25th of October 2020 10:26:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
தென் கொரிய அதிகாரியைச்  சுட்டுக் கொன்று  உடலை எரித்த வட கொரியாவின் செயலால் பதற்றம்!

தென் கொரிய அதிகாரியைச் சுட்டுக் கொன்று உடலை எரித்த வட கொரியாவின் செயலால் பதற்றம்!


தென் கொரிய அரசாங்க அதிகாரி ஒருவர் வட கொரிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தச் கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

வட கொரியப் படைகளால் சுட்டக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் தென் கொரிய அரச அதிகாரி ஒரு கப்பலில் இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்கும் வகையில் கடலில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இரு நாட்டுக் கடற்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்துக் காணாமல் போயிருந்த தென் கொரிய அரச அதிகாரி செவ்வாய்கிழமை வட கொரிய கடற்கரையில் சடலமாகக் காணப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் அவரது சடலம் வட கொரிய கடற்பகுதிக்கு எவ்வாறு சென்றது? என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை எனவும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

எனினும் தென் கொரிய அதிகாரி காணாமல் போன நிலையில் வட கொரியா பகுதியில் சடலமாகக் கண்டறியப்பட்டமை இரு நாடுகளுக்கும் ஏற்கனவே சிக்கலாக உள்ள உறவுகளை மேலும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது.

உளவுத் துறைத் தகவல்களின்படி வட கொரியப் படைகளே தென் கொரிய அதிகாரியைச் சுட்டுக் கொன்று எரித்த கொடூரமான செயலைச் செய்ததாகவும் அதற்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தென் கொரியாவின் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் வட கொரிய உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

இரண்டு கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடந்த பல ஆண்டுகளாகவே மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

இதன் உச்சக்கட்டமாக இரு கொரியாக்களுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை கடந்த ஜூன் மாதம் வட கொரியா துண்டித்தது. அத்துடன், எல்லைப் பகுதியில் இருந்த தகவல் தொடர்பு அலுவலகத்தையும் வட கொரிய குண்டு வைத்துத் தகர்த்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது இரு நாட்டுக் கடல் எல்லைகளில் பல தென் கொரிய மீன்பிடிப் படகுகளை தங்கள் நாட்டுக்கு இழுத்துச் சென்ற வட கொரியா, சிலரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு மற்றவா்களை விடுவித்தது.

எனினும் சமீப காலங்களில் இது போன்ற சம்பவங்கள் பதிவாக நிலையில் இப்போது தென் கொரிய அரச அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் வட கொரியாவில்சடலமாக இனங்காணப்பட்டமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் தென் கொரியர்கள் வட கொரியாவுக்குச் செல்வது மிகவும் அசாதாரணமானது.

ஆனால் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக கடந்த 20 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட கொரியர்கள் தென் கொரியாவுக்கு தப்பி ஒடிவந்து தஞ்சமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது


Category: உள்ளூர, புதிது
Tags: உலகம்


காணொளி


பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE