Tuesday 23rd of April 2024 02:27:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
2021 - ஏப்ரலுக்குள்  அமெரிக்காவில் 700 மில்லியன்  கொரோனா தடுப்பூசிகள்  கிடைக்கும் என நம்பிக்கை!

2021 - ஏப்ரலுக்குள் அமெரிக்காவில் 700 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என நம்பிக்கை!


சாத்தியமான கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று 2021 ஜூலை மாதத்துக்குள் போதியளவில் கிடைக்கும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ரொபேர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் 2021 ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க செனட் குழுவிடம் நேற்று புதன்கிழமை அவர் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 700 மில்லியன் அளவிலான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது 350 மில்லியன் மக்களுக்கு போதுமானது எனவும் ரொபேர்ட் ரெட்ஃபீல்ட் கூறினார்.

முழு அமெரிக்கர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி எங்களுக்குத் தெரியும் எனவும் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய விவகாரங்கள் தொடா்பான செனட் குழுவிடம் அவா் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 2 இலட்சத்தக்கு அதிகமானவர்களைப் பலியெடுத்த கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ரொபேர்ட் ரெட்ஃபீல்ட், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஸ்டீபன் ஹான், அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத் தலைவர் அந்தோனி ஃபாசி, சுகாதார மற்றும் மனித சேவைகள் அதிகாரி பிரட் ஜிரோயர் ஆகியோர் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து நேற்று செனட் குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

கோவிட்-19 தொற்று நோய்க்கு இன்னும் தடுப்பூசி இல்லை. ஆனால் ஃபைசர், மாடர்னா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தத் தடுப்பூசிகளின் செயற்றிறன் நிரூபிக்கப்பட்டவுடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரத்தை விரைவாகப் பெற்று தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

நவம்பர் மாதத்தில் 50 மில்லியன் தடுப்பூசிகளும் டிசம்பர் இறுதிக்குள் 100 மில்லியன் அளவிலான தடுப்பூசிகளும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஃபாசி கூறினார்.

ஏப்ரல் மாதத்திற்குள் மொத்தம் 700 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கதாகவும் ஃபாசி தெரிவித்தார்.

எனினும் அமெரிக்காவில் எப்போது தடுப்பூசி கிடைக்கும்? என்பது குறித்து சுகாதார அதிகாரிகளும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொடர்ச்சியாக முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE