Saturday 20th of April 2024 12:34:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனடா பிரதமரின் சிம்மாசன உரையில் கோவிட்-19  நெருக்கடியிலிருந்து மீளும் திட்டங்களுக்கு முன்னுரிமை!

கனடா பிரதமரின் சிம்மாசன உரையில் கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீளும் திட்டங்களுக்கு முன்னுரிமை!


கனடாவின் 43 ஆவது நாடாளுமன்றத்தில் இரண்டாவது அமர்வு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் சிம்மாசன உரையுடன் ஆரம்பமானது.

தனது சிம்மாசன உரையில் கோவிட்-19 பெருந்தொற்று நோய், அதனை எதிர்கொள்வதற்கான வழிகள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களுக்கான உதவித் தி்ட்டங்கள் போன்றவை குறித்து பிரதமர் ட்ரூமொ முக்கியத்துவம் செலுத்தினார்.

கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கான 4 அணுகுமுறைகளை பிரதமர் தனது உரையில் முன்வைத்தார்.

பாதிக்கப்படும் வணிக நிறுவனங்களுக்கான மானியம் தொடர்பில் உறுதியளித்த பிரதமர், வேலையற்றோர் காட்பீட்டுத் திட்ட உதவி தொடரும் எனவும் கூறினார்.

புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவரது சிம்மாசன உரையில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் உழைக்கும் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வாக்குறுதிகளும் அடங்கியுள்ளன.

காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான கனடாவின் திட்டங்கள் குறித்தும் அவரது சிம்மான உரையில் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது சிக்கன நடவடிக்கைக்கான நேரம் அல்ல எனவும் பிரதமரின் சிம்மாசன உரையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் ட்ரூடோவின் சிம்மாசன உரையில் முன்வைக்கப்பட்ட திட்டங்களின் பெரும்பகுதி அவரது லிபரல் கட்சியின் வாக்குறுதிகளை மீள உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது.

எனினும் பிரதமரின் சிம்மாசன உரையில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உடனடியாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சிம்மாசன உரை தொடர்பான வாக்கெடுப்பில் அதனை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கன்சர்வேடிவ் துணைத் தலைவரான கேண்டீஸ் பெர்கன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் சிம்மாசன உரை "வெற்று வார்த்தைகள்" என மற்றொரு எதிர்க் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் விமர்சித்தார்.

எனினும் சிம்மாசன உரை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதனை புதிய ஜனநாயகக் கட்சி எவ்வாறான நிலையை எடுக்கும் என்பது குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE