Saturday 20th of April 2024 06:25:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
“தியாகி திலீபன் தொடர்பிலான கஜேந்திரகுமார் உரை விவகாரம்” - சபையில் கடும் அமளி!

“தியாகி திலீபன் தொடர்பிலான கஜேந்திரகுமார் உரை விவகாரம்” - சபையில் கடும் அமளி!


தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை அனுமதிக்கக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சபையில் இன்று வாசிக்க இருந்த விசேட கூற்றுக்கு சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்டது.

திலீபனை நினைவுகூர்வதற்கு அரசு பொலிஸார் ஊடாக தடை விதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உரிமையை மறுக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டி, குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் கோர இருந்தார்.

இதனை வலியுறுத்தும் விதத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்காக எழுத்து மூலமான கூற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் நேற்று (23) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று (24) அது குறித்து சபையில் அறிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தில் காணப்படும் வழக்குடன் தொடர்புடைய விடயம் என்பதால் குறித்த கூற்று நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து சபையில் குழப்பங்கள் ஏற்பட்டன.

கட்சித் தலைவர் என்ற வகையில் கஜேந்திரகுமாரின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒன்றுதிரண்டு வலியுறுத்தினர். சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என்றும் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றின் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் செய்தனர். சபாநாயகரும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். இதனால் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக சபை அமளி துமளிப்பட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கொண்டு வந்த விசேட கூற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அனுமதி வழங்க மறுத்ததையடுத்து அதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றினார்.

சுமந்திரன் எம்.பி. தனது உரையில்,

"சபாநாயகரே! நான் இரண்டு காரணிகளை இந்தச் சபையில் கூற விரும்புகின்றேன். நானும் பொது அலுவல்கள் குழுவின் உறுப்பினராக உள்ளேன். கட்சித் தலைவர்கள் மக்கள் சார் விடயங்களை சபையில் கேட்பதில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் ஒரு நபராகத் தனிக் கட்சியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொரு நாளும் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பினார். அப்போது எவரும் தடை விதிக்கவில்லை. அதுபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கூற்று எந்தவொரு நீதிமன்ற விசாரணையிலும் இருக்கும் விடயம் இல்லை. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விடயம் தொடர்புடையது. சபாநாயகரே நீங்கள் தவறான முறையில் சபையில் வழிநடத்துகின்றீர்கள். எனவே, சபையை உடனடியாக ஒத்திவைத்து இந்த விடயத்தைத் தீர்க்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" - என்றார்.

கஜேந்திரகுமாரின் உரிமை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வராமலேயே முடிந்தது.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE