;

Tuesday 20th of October 2020 10:20:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு மீனவப் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதமர் மோடியுடன் பேசவுள்ளதாக வாக்குறுதி!

வடக்கு மீனவப் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதமர் மோடியுடன் பேசவுள்ளதாக வாக்குறுதி!


இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாளைய தினம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே உரையாட உள்ள நிலையில் வட பகுதி மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்தும் தொழில் இழப்புகள் குறித்தும் வட மாகாணத்தில் இருந்து சென்றிருந்த கடற்றொழில் சங்கங்கள், சமாசங்களின் பிரதிநிதிகள் பிரதமர் மகிந்தவிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

அத்துடன் தென்னிலங்கை மீனர்கள் உள்ளிட்ட உள்ளூர் மீனவர்களால் வடபகுதி கடலில் குறிப்பாக யாழ் குடா கடலில் முன்னெடுக்கபட்டு வரும் தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில்களை தடைசெய்ய வேண்டிய அவசியம் குறித்தும் மீனவர் பிரதிநிதிகளால் விளக்கிக்கூறப்பட்டிருந்தது.

இவற்றை செவிமடுத்த பிரதமர், இலங்கை கடல் வளத்தையும் சூறையாடும் வகையில் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு குறித்த கால அவகாசம் கொடுப்பது எனவும், அதற்குள் அதை நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் எல்லை தாண்டிவரும் மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அடிப்படையில் நாளைய பேச்சுவார்த்தையில் தெரிவிக்க உத்தேசித்திருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய மீனவர்களை கைது செய்ய முடியாதுள்ளதாக இலங்கை கடற்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனவர் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தபோது, கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்க முன்வந்தால் மீனவர் தரப்பினரும் இணைந்து எல்லைத்தாண்டி வரும் இந்திய மீனவர்களை கைது செய்து ஒப்படைக்க தயாராக இருப்பதாக பிரதமரிடம் கூறியிருந்தனர்.

கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இது குறித்து பிரதமர் தெரிவித்த தகவல்களுக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமூகமளித்திருந்த மீனவர் பிரதிநிகளுக்கு பிரதமர் சார்பில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

உள்ளூர் மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் எனவும், இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு நாளைய இந்திய பிரதமருடனான காணொளி உரையாடலில் குறித்த கால அவகாசத்தை வழங்குவதென்றும், அதன் பின்னர் அத்துமீறி எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் சார்பில் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

அலரிமாளிகையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இலங்கை கடற்படை, காவல்துறை உள்ளிட்ட உயரதிகாரிகள், தீவகம் மற்றும் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கள், சமாசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE