;

Tuesday 20th of October 2020 12:41:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
நாடு திரும்பிய மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியானது: இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

நாடு திரும்பிய மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியானது: இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு!


வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 6 பேருக்கும், உக்ரேனில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் இருவருக்கும், அல்பீனியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என நேற்றைய தினம் மேலும் 12 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்து வெளிNயுறியவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 158 அக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 174 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE