Friday 19th of April 2024 07:25:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழரின்  நினைவு கூர்வதற்கான உரிமை மீதான  இலங்கையின் தடைகளுக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்!

தமிழரின் நினைவு கூர்வதற்கான உரிமை மீதான இலங்கையின் தடைகளுக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்!


உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த ஒருவரை நினைவுகூர விதிக்கப்படும் இலங்கை அரசின் தடையானது தமிழர் போராட்டத்தின் முக்கிய தினங்கள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவதைத் தடுப்பதற்கு அரசு தொடர்ச்சியாக எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு அச்சமூட்டும் விரிவாக்கமாகும் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் போ்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1987 ஆம் ஆண்டு தமிழர் உரிமைகளுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த லெப். கேணல் திலீபனை நினைவுகூர்வதற்கு இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்டு வரும் தடை கவலையளிப்பதாகவுள்ளன. நினைவேந்தல் செயற்பாடுகளை ஏற்பாடு செய்தவர்கள் தடையின் காரணமாகக் கைதுசெய்யப்பட்டமையை பேர்ள்வன்மையாகக்கண்டிக்கிறது.

மேலும், இத்தடைக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புச் செயற்பாடுகளுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விழைகிறது.

இது தமிழர் போராட்டத்தின் முக்கிய தினங்கள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவதைத் தடுப்பதற்கு அரசு தொடர்ச்சியாக எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு அச்சமூட்டும் விரிவாக்கமாகும். யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் போராட்டத்தை நினைவுகூர்வதற்கு முயற்சிக்கும் தமிழர்களைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாகக்க ண்காணித்தும், துன்புறுத்தியும் வந்திருந்தபோதிலும், அதற்காகச் சட்டச்செயன்முறையைமுறை கேடாகப் பயன்படுத்துவது எச்சரிக்கையளிப்பதாகவுள்ளது.

முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர் ம.க. சிவாஜிலிங்கம் கடந்தவாரம் கைது செய்யப்பட்டதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிப்பதோடு, அரசின் இச்செயற்பாடுகளைக் கண்டிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் காட்டிய ஒற்றுமைக்குத் தனது ஆதரவையும் தெரிவிக்கிறது.

கடந்தகாலத்தில், தமிழர் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களையும், அதில் கலந்து கொண்டவர்களையும் பாதுகாப்புப் படையினர் கண்காணித்தும், துன்புறுத்தியும் வந்துள்ளதைப் பேர்ள் தனது 2016 ஆம்ஆண்டின் ‘கடந்தகாலத்தை துடைத்தழித்தல்: வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் நினைவுகூரல் மீதானஅடக்குமுறை’ எனும் அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளது.

எனினும், ஒரு மீதேசியவாத,சிங்கள பௌத்த மேலாதிக்க அரசும், தமிழர் அரசியல் மீது அக்கறை கொள்ளாத சனாதிபதியும், பாராளுமன்றமும் சேர்ந்த தற்போதைய காலநிலை இன்னும் ஆபத்தானது.

இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களால் ஆண்டுதோறும், நவம்பர் 27 ஆம் திகதி நினைவு கூரப்படும் மாவீரர்நாள் மற்றும்மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவுநாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்.

இது பல்லாண்டுகளாகத் தமிழர்கள் போராடிப் பெற்ற அரசியல் வெளியை மேலும் சுருங்கச்செய்வதோடு, இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சிலர் கொண்டிருக்கும் சிறிய நம்பிக்கையையும் சிதைப்பதாக அமையும்.

தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுடன், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்துவருகிறது.

நினைவுகூரல் மீதான அரச அடக்குமுறையை முடிவுக்குக்கொண்டுவருவது வன்முறையிலிருந்து தப்பிப்பிழைத்த அனைவருக்கும் உதவி செய்வதாக அமையும் என்பதுடன், அவர்களது காயங்களை ஆற்றும் செயன்முறையை எளிதாக்கும். “இன முரண்பாட்டின் நிலையான தீர்விற்கு, அதன்பங்கேற்பாளர்களும், அதனால் பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களும் சுதந்திரமாக நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்,” என எமது நிர்வாக இயக்குனர் தாஷா மனோரஞ்சன் கூறினார்.

“நினைவுகூரல் மீதான அரச கட்டுப்பாடுகளும், ஒருபக்கச்சார்பான விவரணங்கள் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதும் நாட்டை மேலும் பிளவுபடுத்துவதாகவே அமையும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் நினைவுகூரல் மீதான தடை ஒரு படுகுழியாகும். அதுவேகமாக இலங்கையை மேலும் முரண்பாட்டிற்குள்தள்ளும். தமிழ்ச் சமூகத்தின் நினைவுகூர்வதற்கான உரிமையில் தலையிடுவது, சுதந்திரமான பேச்சையும், கருத்து வெளிப்பாட்டையும் பாதுகாக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் என்ற சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வ தேச சமூகத்தை வலியுறுத்துகிறது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அடக்குமுறைக்கும், வெளிப்படுத்தப்படும் பாரபட்சத்திற்கும், பொதுமக்கள்மீது நிகழ்த்தப்படும் பாரிய அட்டூழியங்களுக்கும் பின்விளைவுகள் இருந்தேயாக வேண்டும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE