Thursday 18th of April 2024 04:24:56 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்-19 தடுப்பூசி முதற்கட்ட மனிதப் பரிசோதனையில் வெற்றி!

ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்-19 தடுப்பூசி முதற்கட்ட மனிதப் பரிசோதனையில் வெற்றி!


அமெரிக்காவின் ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட மனிதப் பரிசோதனையில் வெற்றிகரமான விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

Ad26.COV2.S என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியை முதற்கட்டமாக 800 பேருக்கு கொடுத்துப் பரிசோதித்ததில் அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சோதனையில் வயது அடிப்படையில் இரண்டு குழுக்கள் பங்கேற்றன. முதல் குழுவில் 18 முதல் 55 வயதுடையவர்களும் இரண்டாவது குழுவில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களும் பற்கேற்றனர்.

இந்நிலையில் சோதனையில் தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதுடன், அடுத்தகட்ட பெரிய அளவிலான சோதனைகளுக்கு செல்ல போதுமான பாதுகாப்பானது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்தத் தடுப்பூசியின் ஆரம்பக்கட்டப் பரிசோதனை குரங்குகளுக்கு நடத்தப்பட்டது. அதில் சாதகமான விளைவுகள் காணப்பட்டதை அடுத்தே அடுத்த கட்ட மனிதப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசியின் இறுதிக்கட்டப் பரிசோதனையில் சுமார் 60,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான அனுமதிகள் விண்ணப்பம் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. மேலும், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம்கட்டச் சோதனை இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும் என ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது .


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE