;

Friday 30th of October 2020 04:28:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தி ரொரண்டோவில் ஆர்ப்பாட்டம்!

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தி ரொரண்டோவில் ஆர்ப்பாட்டம்!


கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி ரொரண்டோ - டவுண்ரவுண் பகுதியில் உள்ள யோங்-டன்டாஸ் சதுக்கத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் முக கவசங்களை அணியாமலும் சமூக இடைவெளியைப் போணாத வகையிலும் ஒன்றுகூடியிருந்தனர்.

"தி லைன்" என அழைக்கப்படும் ஒரு குழு பேஸ்புக் ஊடாக இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தது. சுதந்திரத்துக்கான அணிவகுப்பு என அந்தப் போராட்டத்துக்கு அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் யோங் தெருவில் இருந்து ப்ளூர் வரையான பகுதிக்கு நடை பயணமாகச் சென்றும் தனது கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஒன்ராறியோவில் முன்னர் விதிக்கப்பட்டிருந்த தீவிர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இப்போது 3 ஆம் கட்டமாகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எனினும் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொற்று நோயாளர்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் பார்கள், உணவகங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்குக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உள்ளரங்கில் 10 பேரும் வெளிப்புறங்களில் 25 பேருக்கும் மேல் ஒன்று கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ரொறன்ரோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE