Thursday 25th of April 2024 05:51:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடக்கு-கிழக்கு தழுவிய புரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆதரவு!

வடக்கு-கிழக்கு தழுவிய புரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆதரவு!


தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பொது முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்தாலைஅனுஸ்டித்து தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக அனைவரும் ஒன்றினைய வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள ஹர்தால் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான போராளிகளும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் தமது இன்னுயிரை ஈந்திருக்கின்றார்கள்.

இவர்களது மரணம் என்பது சாதாரணமான சம்பவங்கள் அல்ல, இவர்கள் தமிழ் மக்களுடைய எதிர்காலம், ஒரு செழிப்பான வாழ்க்கை அதற்காக தமது உயிரையே விலையாக கொடுத்து இருக்கின்றார்கள். அவ்வாறான உயிர்களை கௌரவப்படுத்துவதும், அதற்கான அஞ்சலிகளை செலுத்துவதும், அவர்களை நினைவு கூறுவதும் ஒவ்வொரு தமிழ் மக்களது கடமையாகும்.

அதனை செய்வது தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையுமாகும். அந்த அடிப்படை உரிமை என்பது சர்வதேச சட்டங்களால் நிலைநிறுத்தப்பட்டும் இருக்கின்றது.

ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் அரசாங்கத்துடன் போராடியே இந்த நினைவு கூறலை நடாத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்தமுறையும்கூட நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்வதில் இலங்கை அரசாங்கம் மும்முரமாக செயல்ப்பட்டு, வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலும் இது தடைசெய்யப்பட்ட ஒரு விடையமாக இருந்திருக்கின்றது. ஆகவே நாங்கள் இதற்கு எதிராக கண்டன கூட்டங்களை வைப்பதை கூட தடை செய்து அடிப்படை ஜனநாயக உரிமைகளும் மீறப்பட்டுள்ள சூழ்நிலையைத்தான் நாங்கள் பர்க்கின்றோம்.

ஆகவேதான் நாங்கள் நேற்றைய தினம் கூட ஒரு கண்டன உண்ணா நோன்பை செய்வதற்கு கூட இடமில்லாமல் விரட்டப்பட்டு விரட்டப்பட்டு சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் உண்ணா நோன்பை திடீர் என வைக்கும் நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி இருந்தது.

மிக மோசமான இராணுவ கட்டுப்பாடு, இராணுவ, பொலீஸ் சுற்றிவளைப்புக்குள்தான் இந்த உண்ணா நோன்பும் நேற்று நடைபெற்றது.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளை இவ்வாறு மிதிக்கின்ற செயல்பாட்டை, தமக்காக மரணித்த மக்களை அவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதை தடை செய்த அரசாங்கத்தை, தமிழ் மக்கள் தங்கள் உறவுகளை தமக்கு முன்னாள் கொல்லப்பட்டவர்களை, இறந்தவர்களை நினைவுகூர்வதை தடைசெய்த இந்த அரசாங்கத்தை கண்டனம் தெரிவிக்கு முகமாக மாத்திரம் அல்ல தமிழ் மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்கு உரிமை இருக்கின்றது என்பதை நாங்கள் எல்லோரும் இணைந்து இந்த அரசாங்கத்துக்கு சொல்லவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

அதை எவ்வாறு சொல்ல முடியுமென்றால் நிச்சயமாக வடகிழக்கில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாளைய தினம் திங்கட்கிழமை ஒரு முழுமையான கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்றவற்றின் ஊடான ஹர்தாலை நடாத்தி தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக அனைவரும் ஒன்றினைந்து நாளைய தினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்தாலை அனுஸ்டித்து அரசாங்கத்திடம் எமது தேவையை வலியுறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிர்ப்பந்தத்தை அரசாங்கம்தான் எம் மீது தினித்தும் இருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் வடகிழக்கில் வாழக்கூடிய அனைத்து தமிழ் மக்களிடமும், தமிழ் பேசும் மக்களிடமும் கோருவது இந்த அடிப்படை உரிமைகளை பேனுவதற்காக, காப்பாற்றுவதற்காக அதனை இந்த அரசாங்கத்திற்கு மிக தெளிவாக வெளிப்படுத்தும் முகமாக நாளைய ஓர் தினம் நீங்கள் எல்லோரும் உங்கள் கடைகளை அடைத்து, வீடுகளில் இருந்து அனுஸ்டானங்களை மேற்கொள்ளும் படியும் அரசாங்கத்திற்கு மிக தெளிவாக நாங்கள் எங்கள் கோரிக்கைகளை கோருகின்றோம், இவ்வாறான கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்.

நாங்கள் மரணித்துப்போன எமது மக்களுக்காக உயிர் நீர்த்த, தியாகம் செய்த அந்த நல்ல உயிர்களை அஞ்சலிப்பதற்கு எந்த தடைகளும் ஏற்படுத்தக் கூடாது என்பதை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கூறி அதற்கான ஒரு நாளாக நாளைய நாளை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் அதற்காக ஒரு ஹர்த்தாலை அனுஸ்டித்து அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE