Friday 29th of March 2024 05:31:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
அம்பாறை குப்பை மேட்டில் கழிவுகளை உண்டு பசிபோக்கும் யானைகள்: பரிதாபமாக உயிரிழக்கும் அவலம்!

அம்பாறை குப்பை மேட்டில் கழிவுகளை உண்டு பசிபோக்கும் யானைகள்: பரிதாபமாக உயிரிழக்கும் அவலம்!


இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில்-பள்ளக்காடு பகுதியில் உள்ள குப்பை மேட்டில் யானைகள் உணவு தேடி அலையும் பரிதாப சம்பவம் அண்மைக் காலமாகத் தொடர்ந்து வருகிறது.

இந்தப் பழக்கத்தினால் யானைகள் நோய்களுக்கு உள்ளாகி அவற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

அஷ்ரப் நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த குப்பை மேட்டில் சம்மாந்துரைஇ கல்முனைஇ கரைத்தீவுஇ நிந்தாவூர்இ அட்டாளைச்சேனைஇ அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் சேமிக்கப்படும் கும்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில் அருகில் உள்ள காடுகளில் இருக்கும் யானைகள் தினமும் இந்தக் குப்பை மேட்டுக்கு வந்து உணவு தேடி அலைவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஆரம்பத்தில் இந்தக் குப்பையைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளே நுழைய முடியாமல் இருந்தன. இப்போது தடுப்பு வேலிகள் விழுந்துள்ளதால் காட்டு யானைகள் அதற்குள் நுழைந்து கழிவுகளை உண்கின்றன.

இந்தக் குப்பை மேட்டில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகமாக உள்ள நிலையில் கழிவு உணவுகளுடன் இவற்றையும் சோ்த்து யானைகள் உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் காணப்படும் யானைகளின் எச்சங்களில் செரிமானமாகாத பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் உள்ளடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கும்பை மேடு அமைந்துள்ள பகுதியில் இறந்த சில யானைகளின் சடலங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவற்றின் வயிற்றுக்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட செரிமானமாகாத பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

மனித வாழ்விடங்களுக்கு மிக நெருக்கமாக யானைகள் உணவைத் தேடப் பழகிவிட்ட நிலையில் அருகிலுள்ள நெல் வயல்களிலும் யானைகள் கூட்டமாகப் புகுந்து அவற்றை அழித்துவரும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலைமையை குறித்து அதிகாரிகள் நேரில் பார்த்து ஆராய்ந்துள்ளபோதும் இங்கு யானைகள் வருகையைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தது குப்பை மேட்டைச் சுற்றி வேலி கூட அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தக் குப்பை மேட்டில் உள்ள கழிவுகளை உண்ணும் யானைகள் உயிரிழந்து வருவருவது அதிகரித்துள்ளது.

இதற்குத் தீா்வு காண ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் விலங்குகள் நல ஆா்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE