Friday 19th of April 2024 10:07:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரொரண்டோவில்  தமிழர்கள் அதிகம் வாழும்   பகுதியில் அமையவுள்ள தமிழ்ச் சமூக  மையம்!

ரொரண்டோவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமையவுள்ள தமிழ்ச் சமூக மையம்!


ரொரண்டோ – ஸ்கார்பாரோ பகுதி, 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள நிலத்தை எதிர்காலத்தில் தமிழ்சமூக மையம் அமைவதற்கான இடமாக ஒக்டோபர் மாதத்தில் நகரசபைக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளது.

இந்த தளம் ரொரண்டோவில் உள்ள தமிழ் பேசும் மக்களின் மையப்பகுதியிலும், மார்க்கம் மற்றும் டூரம் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் குடியிருப்பாளர்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.

ரொரண்டோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் நகரவாக்கச் சபை 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தை எதிர்காலத்தில் தமிழ்சமூக மையம் அமைவதற்கான இடமாக நகரசபைக்கு நேற்று திங்கட்கிழமை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழ்ச் சமூக மைய முன்னெடுப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது ரொரண்டோ நகரசபை உபகுழுவினால் ஒக்டோபா் 5-ஆம் திகதியும். ரொரண்டோ நகரசபையினால் ஒக்டோபா் 27ம் திகதியும் அங்கீகாரத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலத்தை மிகக்குறைந்த குத்தகைக் கட்டணத்தில் பெற்றுகொள்வதற்காக ரொரண்டோ நகரசபையுடனும், நகரசபை முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வி உடனும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும் கடந்த ஒருவருட காலமாக நெருக்கமாகச் செயற்பட்டு வந்துள்ளோம் என கனடா தமிழ்ச் சமூக மைய முன்னெடுப்புக் குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சமூக மையத்துக்கான இடத்தை இனங்காண்பதற்காக நகர சபையானது முழுத் தமிழ் சமூகத்துடனும் இணைந்து செயற்பட்டது என்று ரொரண்டோ நகரசபை முதல்வர் ஜோன் டோரி (John Tory) கூறியுள்ளார்.

”இந்த அமைவிடத்தை பெற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாது இவ்வருங்காலக் கனவை நனவாக்கலிலும் இதே அயராத அர்ப்பணிப்புடன் கூடிய கடின முயற்சி தேவை. தமிழ் சமூகத்தின் இம் முயற்சிக்கு எனது முழுமையான ஆதரவு உண்டு என ரொரண்டோ நகரசபை உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி (Jennifer McKelvie) தெரிவித்துள்ளார்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து உழைத்து இத் தமிழ்ச்சமூக மையத்தை உங்கள் முன்னிலைக்குக் கொண்டுவருவோம் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ரொரண்டோ நகர சபையானது நகரவாக்கச் சபையினூடாக 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள நிலத்தை தமிழ்ச் சமூக மைய அமைவிடத்துக்கு வழங்க முன்வந்தமையையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

கனடியத் தமிழர்கள் மட்டுமல்லாது ரொரண்டோ பெரும்பாகத்தில் வசிக்கும் ஏனைய சமூகத்தினரும் இங்கு அமையவுள்ள சமூக மையத்தின் விளையாட்டு, பண்பாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சித் திட்டங்களினால் பயனடைவார்கள்.

இக்கனவினை நனவாக்கும் முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று உங்களுடன் இணைந்து செயற்பட நான் ஆவலாக உள்ளேன் என்று நகரசபை உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி தெரிவித்துள்ளார்.

311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள இந்த உபரி நிலமானது ரொரண்டோ நகரசபையினால் ஒரு சமூக மையத்தின் கட்டுமானத்துக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆதனமாகும். இது வெற்று நிலமாக இவ்வளவு காலமும் இப்படி ஒரு சந்தர்ப்பதிற்காகக் காத்திருந்தது. இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் ரொரண்டோ, மார்க்கம், டுறம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளமை குறிப்பித்தக்கது.

இதேவேளை, இந்த இடத்தை தமிழ் சமூக மையத்துக்காகப் பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு கடந்த ஆண்டில் எங்களுடன் நெருக்கமாக பணியாற்றிய ரொரண்டோ நகரம், நகரசபை முதல்வர் ஜோன் டோறி மற்றும் நகர சபை உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துத்கொள்வதாக ரொரண்டோ - ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஸ்கார்பாரோவில் சமுதாய மையம் அமைவதற்கான தேவைகள் பற்றி அறிந்துகொள்ள www.tamilcentre.ca என்ற இணையத்தளத்தை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE