Wednesday 24th of April 2024 06:28:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரையும் இலங்கைக்கு உள்ள சவாலும் - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்!

ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரையும் இலங்கைக்கு உள்ள சவாலும் - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்!


ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் இலங்கையின் ஜனாதிபதி இணையவழி உரையாடலின் போது தெரிவித்துள்ள விடயம் கவனிக்கப்பட வேண்டியதாகும். இலங்கையின் இன்றய சூழலை மையப்படுத்தி அவரது உரை அமைந்திருப்பது அரசியல் பொருளாதார இராணுவ மூலோபாயக் கொள்கைக்கான உரையாடலாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதனை நோக்கியதாகவே இக்கட்டுரை அமையவுள்ளது.

முதலில் ஜனாதிபதியின் உரையில் அமைந்துள்ள இக்கட்டுரைக்கு உரிய உள்ளடக்கத்தினை அவதானிப்பும்

ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்குமான கூட்டுறவானது ஒரு நாட்டின் நன்மைக்காக மற்ற எந்தவொரு நாட்டையும் பயணக்கைதியாக்கும் வகையில் அமையக்கூடாது.உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத ஒர் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் இன்றைய காலப்பகுதியில் நாடுகளின் இறையாண்மை மற்றும் சமத்துவத்தை ஐ.நா. சபை மதித்து செயல்பட வேண்டும். இறையாண்மை கொண்ட நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ.நா சபை தலையீ_டு செய்யாது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரை பல விடயங்களை வெளிப்படுத்தி உள்ளது.

கொவிட்-19 இற்கு பிற்பாடு உலக வல்லரசுகளுக்கிடையே பெரும் அச்சுறுத்தல் நிகழுகிறது என்பது உண்மையானதே. அத்தகைய அச்சுறுத்தலில் சிறிய நாடுகளும் உட்படுகின்றன என்பது தெளிவான செய்தியாகும். நாடுகளுக்கிடையிலான கூட்டுறவானது இன்னோர் நாட்டினால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதை ஜனாதிபதியின் உரை தெரிவித்தது போலவே அமைந்துவருகிறது. இலங்கைக்கும் அத்தகைய நெருக்கடி உண்டு என்பதை கடந்த காலத்தில் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தமை கவனத்திற்குரியது. அதாவது இலங்கை- சீனா உறவை இந்தியா அமெரிக்கா போன்ற தேசங்கள் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறுகின்றதுடன் இலங்கையை பயணக்கைதியாக்கும் பொறிமுறைக்குள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதை ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்துள்ளார். அண்மையில் பலவிடயங்கள் இத்தகைய கருத்துச்சார்ந்து நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா தற்போது கொழும்பு நிதி நகரமென அழைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்திற்கான கட்டுமானப்பணியினை மேற்கொண்ட சீனாவின் சிசிசிசி நிறுவனத்தின் மீது தடைவிதித்ததுடன் அத்தகைய நிறுவனத்துடன் உறவு வைத்துள்ள நாடுகளையும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி அமெரிக்காவின் எம் சிசி உடன்படிக்கையை நிறைவேற்றும் பணியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்திவருகின்றன.ஆனால் கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் பற்றி இலங்கை அரசாங்கத்தின் பார்வை வேறுபட்டதாகும். அதனை அண்மையில் அதனைப்பார்வையிட்ட பிரதமர் மகசிந்த ராஜபக்~ தெரிவத்த கருத்தினை அவதானித்தால் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.

முன்னைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இரண்டுவழூருடங்கள் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் இடைழநிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பித்து;ளளன. கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததும்’ இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் முக்’கியமான பங்களிப்பினை கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் வழங்கப்போகிறது. அதில் 83000 பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அப்படியாயின் அத்தகைய நகர அபிவிருத்தியிலிருந்த திட்டத்திலிருந்து சீனாவின் சிசிசிசி நிறுவனத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதை பிரதமர் தெளிவித்துள்ளமை தெரிகிறது. அதாவது அமெரிக்கா தடை செய்த நிறுவனங்களுடனான உடன்பாட்டினை கைவிட இலங்கை தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்க-இலங்கை உறவில்; அதிக விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளமையை அவதானிக்க முடிகிறது. அத்துடன் அவுஸ்ரேலிய நாட்டுத் தூதுவரது பிரதமருடனான சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றதாக தெரிகிறது. அதுவும் இந்தோ-பசுபிக் உபாயம் தொடர்பிலான சந்திப்பாகவே அமைந்திருந்தது. அதில் இரு நாட்டு இராஜதந்திரிகளும் உரையாடிய முக்கிய விடயமாக அமெரிக்காவுடனான உறவென்பது இந்தோ-பசுபிக் தொடர்பிலானதாகவே அமைந்திருக்கிறது என்பதாகும்.

எனவே தான் இலங்கையின் ஜனாதிபதியின் பொது சபையில் நிகழ்ந்த உரையாடலில் முக்கியமானதாக நாடுகளுக்கிடையிலான உறவும் அதன் உபாயமும் பேசப்பட்டுள்ளது. இலங்கையை பிணைக்கைதியாக்கும் அமெரிக்காவின் அணுகுமுறை தொடர்பிலேயே ஜனாதிபதியின் உரை கட்டியம் கூறியுள்ளது. அதாவது சீனாவுடனான உறவை பேணுவதற்கு அமெரிக்கா போடும் தடைகளை மறைமுகமாக தெரிவித்திருப்பதுடன் தமிழர் விடயத்தில் ஐ.நா சபை எடுக்கும் நடவடிக்கையை மறைமுகமாக கண்டிப்பதாகவும் அவரது உரை அமைந்திருந்தது. ஐ.நா.சபையின் தலையீட்டை தடுக்கும் ஒரு நகர்வாகவே அத்தகைய உரை அமைந்துள்ளது. பெருமளவுக்கு புதிய அரசாங்கத்தின் பதவிக்கு பின்பான உள்நாட்டு ந8டைமுறையும் உலகளாவிய நடைமுறையும் அதீதமாக அமைய முனைகிறது. அதனை நோக்கி நாடுகளுயும் சிவில் அமைப்புகளும் ஐ.நா.சபையும் செயல்படுவது ஆபத்தானதாக அமைந்துவிடுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்கான உரையாகவே ஐ.நா.வில் ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது.

இது மட்டுமன்றி நாடுகளின் இறையாண்மையும் சமத்துவமும் பற்றி ஜனாதிபதியினது உரை முதன்மைப்படுத்தியுள்ளது. இது கடந்த காலம் முழுவதும் தென் பூகோள நாடுகளில் வல்லரசுகள் கையாண்டுவரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுவதாகவே தெரிகிறது. சதாம் உi~ன் கடாபி யசீர் அரபாத் போன்ற தலைவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு பின்னால் வல்லரசுகளின் நகர்வுகளை அவதானிக்கும் போது இறையாண்9மையும் சமத்துவமும் சிறிய நாடுகளை மடடுமல்ல தென் பூகோள நாடுகள் அனைத்தையும் பாதிப்பதாகவே உள்ளது. அதில் இலங்கையும் அகப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்வதாகவே தெரிகிறது. இலங்ரைகயின் போக்கில் அத்தகைய நெருக்கடி ஒன்றுக்கான சூழலை ஜனாதிபதியின் உரை பதிவு செய்வதாகவே விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

எனவே பிராந்திய சர்வதேச அரசியல் போக்கில் ஜனாதிபதியின் உரை அதிக செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதனை தவிர்க்க முடியாது ஐ.நா வின் ஒழுங்குக்கும் கவனத்திற்கும் கொண்டுவந்ததில் ஜனாதிபதியின் உரை முக்கியமானது. ஆனால் உள்நாட்டில் தலையிடுவதென்பதும் நாடுகளின் இறைமையை மீறுவதென்பதும் சர்வதேச சட்ட வரைலபுகளுக்கு உட்பட்ட விடயமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாடுகளுக்கிடையிலான உறவானது மனித உரிமைகளிலும் மனிதாபின சட்ட வரைபுகளிலும் தங்கியிருக்கும் உலக ஒழுங்கிற்குள் நாடுகள் இருப்பதென்பதையும் கருத்தில் கொள்வது அவசியமானது. அத்தகைய பொறிமுறையில் பாதிப்பு ஏற்படும் Nபுhது அதிலிருந்து மீள்வதற்கு நா:டுகளை கையாளும் பொறிமுறையாக ஐ.நா. சபை அமைந்திரு;பபது அவசியமானது. ஆனால் ஐ.நா. தனித்து வல்லரசுகளது நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதென்பதே தற்போதுள்ள குழப்பமும் நெருககடியுமாகும்.ஜனாதிபதியிஜன் உரை மூலம் தெரிவது இலங்கை எத்தகைய நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது என்பதாகும். அவ்வாறே அதிலிருந்து விலகிக் கொள்வதற்கான பாதுகாப்பினை உருவாக்க முயல்கின்றதையும் அவதானிக்க முடிகிறது.இதனடிப்படையிலிருந்து கொண்டே இலங்ரைகயின் வெளியுறவையும் அதன் பொருளாதார இராணுவக் கொள்கைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE