Saturday 20th of April 2024 05:45:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடலில் தவறி வீழ்ந்த மீனவரைக் காணவில்லை!

கடலில் தவறி வீழ்ந்த மீனவரைக் காணவில்லை!


தமிழகம் இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் கடலுக்குச் சென்ற மீனவர் நேற்று புதன் கிழமை (30) கடலில் விழுந்து மாயமானார்.

காணமல் போன மீனவர் குறித்து இது வரை எந்த வித தகவலும் தெரியாததால் ராமநாதபுரம் மாவட்ட மீனவக் கிராமங்களில் சோகத்தை ஏற்பட்டுதியுள்ளது.

நேற்று புதன் கிழமை (30) காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 550க்கும்; மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குள் சென்றனர்.

இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த தனிக்கிளாஸ்; என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற இன்னாசி, ஜோகன், இனஸ்கோ, இம்மானுவேல், கார்சன், சுவித்து ஆகிய 7 பேர் விசைப்டகில் நேற்று புதன் கிழமை இரவு கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதில் கார்சன் என்ற மீனவர் படகிலிருந்து நிலை தடுமாறி நடுக்கடலில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து படகில் இருந்த சக மீனவர்கள் இரவு முழுவதும் அப்பகுதியில் தேடினர் ஆனால் கார்சன் கிடைக்கவில்லை.

எனவே உடனடியாக இச்சம்பவம் குறித்து விசைப்படகு உரிமையாளர் மண்டபம் கடலோர காவல் படை, மெரைக் போலீஸ் மற்றும் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்த இன்று வியாழக்கிழமை (1) காலை முதல் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹேவர்கிராப்ட் மற்றும் சிறிய ரக ரோந்து படகுகள் கொண்டு கரையோர பகுதிகளில் தேடி வருகின்றனர்.

அதே போல் மாயமான மீனவரின் உறவினர்களின் உதவியுடன் 13 பேர் கொண்ட மெரைன் போலீசார் செயற்கை சுவாச கருவிகளுடன் தேடி வருகின்றனர்.

ஆனால், இதுவரை மாயமான மீனவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் மத்திய, மாநில அரசுகள் மாயமான மீனவரை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க சென்று கடல் சீற்றத்தால் மீனவர் கடலில் மாயமான போன சம்பவம் ராமநாதபுரம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE