Wednesday 2nd of December 2020 03:19:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 6 இலட்சத்தை கடந்து தொடரும் கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் 6 இலட்சத்தை கடந்து தொடரும் கொரோனா பாதிப்பு!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (ஒக்-01) மாலை வரையான 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பில் தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளா நாளாந்த அறிக்கையின் அடிப்படையில்,

நேற்றைய தினம் 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி 66 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 9 ஆயிரத்து 586 ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் ஆயிரத்து 289 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் 5 இலட்சத்து 47 ஆயிரத்து 335 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 46 ஆயிரத்து 369 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE