Friday 19th of April 2024 09:21:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
நேற்று  3.42 இலட்சம் பேருக்கு கொரோனா;  5,882 பேர் மரணம்!

நேற்று 3.42 இலட்சம் பேருக்கு கொரோனா; 5,882 பேர் மரணம்!


உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்றின் உச்சகட்டமாக கடந்த 24 மணியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் நேற்று 5,882 பேர் உலகெங்கும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

முன்னதாக கடந்த 02- ஆம் திகதி 3.26 இலட்சம் தொற்று நோயாளர்கள் பதிவானதே இதுவரை ஒரு நாளில் பதிவான அதிகபட்ச அதிகரிப்பு நேற்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ஆர்ஜண்டீனா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் அதிக கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.

உலகில் மிக அதிகளவு கொரோனா மரணங்கள் நேற்று இந்தியாவில் பதிவாகின. அத்துடன் அமெரிக்காவை அடுத்து உலகில் இரண்டாவது அதிக தொற்று நோயாளர்களும் இந்தியாவில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, உலகெங்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டவா்களின் தொகை 3 கோடியே 63 இலட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 879 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10 இலட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கிவருகிறது.

அதே நேரத்தில் 2 கோடியே 74 இலட்சம் (75%) நோயாளிகள் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 79 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது உலகில் அதிகளவு தொற்று நோயாளர்கள் பதிவாகிவரும் நாடாக இந்தியா உள்ளது.

இருப்பினும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவா்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 77 இலட்சம் பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதே நேரத்தில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

உலகில் அதிகளவு தொற்று நோயாளர் தொகை மற்றும் இறப்புக்கள் பதிவான நாடுகளின் விபரம் வருமாறு,

அமெரிக்கா: தொற்று- 7,775,983, இறப்பு- 216,763

இந்தியா: தொற்று - 6,832,988, இறப்பு- 105,554

பிரேசில்: தொற்று - 5,002,357, இறப்பு- 148,304

ரஷ்யா: தொற்று - 1,248,619, இறப்பு - 21,865

கொலம்பியா: தொற்று - 877,683, இறப்பு- 27,180

ஸ்பெயின்: தொற்று - 872,276, இறப்பு- 32,562

ஆர்ஜண்டீனா: தொற்று - 840,915, இறப்பு- 22,226

பெரு: தொற்று - 835,662, இறப்பு- 33,009

மெக்ஸிக்கோ: தொற்று - 794,608, இறப்பு- 82,348

தென்னாப்பிரிக்கா தொற்று - 685,155, இறப்பு- 17,248


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE