;

Thursday 29th of October 2020 05:05:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
இணைய வழி நேரலை விவாதத்தில்  பங்கேற்க முடியாதென ட்ரம்ப் மறுப்பு!

இணைய வழி நேரலை விவாதத்தில் பங்கேற்க முடியாதென ட்ரம்ப் மறுப்பு!


அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுடனான இரண்டாவது விவாதத்தை இணைய வழியில் நடத்தினால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நேரடி விவாத்தை நடத்த முடியாவிட்டால் விவாதம் ஒழுங்கமைக்கப்பட்ட அதே நாளில் புளோரிடாவில் பிரச்சாரப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவா் கூறியுள்ளார்.

ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 15-ஆம் திகதி மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இணைய வழி விவாதத்தில் பங்கேற்க முடியாது என ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஒரு கணினிக்கு பின்னால் இருந்து கொண்டு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்று என் நேரத்தை வீணடிக்க போவதில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் தனது முடிவுகளை நொடிக்கு-நொடி மாற்றுவதாக இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, வழக்கமான முறைப்படி மியாமியில் நேரடி விவாதத்தை நடத்துவதற்கும் ஜோ பிடனின் பிரசார குழு விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளது.

நவம்பர் 3-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி ஜோ பிடன் தேசிய அளவில் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் முக்கிய மாகாணங்களின் இறுதி வாக்குப்பதிவை பொறுத்தே முடிவும் அமையும் எனக் கருதப்படுகிறது.

இதேவேளை, தொற்று நோய் அச்சம் காரணமாக அமெரிக்கர்கள் சுமார் 60 லட்சம் பேர் ஏற்கனவே தபால் மூலம் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE