Friday 29th of March 2024 12:14:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். பல்கலை குழப்பம்: மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி நடவடிக்கை!

யாழ். பல்கலை குழப்பம்: மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி நடவடிக்கை!


யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது.

யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்ப்பட்டிருந்த கலைப்பீட மாணவர்கள் 22 பேர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு வகுப்புத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய குறித்த அமைதியின்மை குறித்து யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் கூடி மேற்குறித்த தீர்மாகத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பேரவை உறுப்பினர் ஒருவர் அருவி இணையத்திற்கு தெரிவித்துள்ளர்.

விசாரணை நிறைவு பெறும் வரையில் மாணவர்களின் இடைநிறுத்தும் செயற்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பேரவையினால் முன்னாள் பீடாதிபதி ம.நடராஜசுந்தரம் அவர்களைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்களில் கணிசமானவர்கள் கடந்த காலங்களில் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு குழப்பகரமான சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருந்ததாக இன்றைய கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்படதாக தெரிய வருகிறது.

இதேவேளை இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தலைமையிலான சிரேஸ்ட்ட விரிவுரையாளர்கள் நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டதுடன் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE