Tuesday 23rd of April 2024 03:46:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
முத்தையா முரளிதரன் குறித்த '800' திரைப்படத்திற்கு தீவிரமடையும் எதிர்ப்பு: படக்குழுவின் திடீர் அறிக்கை!

முத்தையா முரளிதரன் குறித்த '800' திரைப்படத்திற்கு தீவிரமடையும் எதிர்ப்பு: படக்குழுவின் திடீர் அறிக்கை!


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்ககை வரலாற்றை மையமாக கொண்ட திரைகதை அடிப்படையில் எடுக்கப்பட இருக்கும் '800' திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வரும் நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் முரளிதரனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்புகள் காட்டப்பட்டு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும்இ விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.

நேற்று முன்தினம் மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதுதவிர பல தரப்பட்டவர்களும் சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். திரைப்படத்தின் ஒரு கட்சி கூட எடுக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் குறித்த திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள் அடித்து உடைக்கப்பட்டு திரைகள் கிழிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் மிரட்டல் பதிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழனப் படுகொலைக்கு ஆதரவாக முரளிதரன் தெரிவித்திருந்த கருத்துகளும், ராஜபக்ச தரப்பிற்கு ஆதரவாக இருப்பதையும் அடிப்படையாகக் கொண்டே தமிழ்நாட்டில் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிரஇ இதில் எந்த வித அரசியலும் கிடையாது.

தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் திரைப்படத்தின் கதையம்சம்.

திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இந்தியா, இலங்கை, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE