Tuesday 19th of March 2024 05:08:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவசர நிலை பிரகடனத்தை மீறி அரசுக்கெதிராக  தாய்லாந்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அவசர நிலை பிரகடனத்தை மீறி அரசுக்கெதிராக தாய்லாந்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!


தாய்லாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் அந்நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் பாங்கொக்கில் அவசர நிலை பிரகடனம் செய்யபட்டுள்ளது.

எனினும் அவசர நிலை அறிவிப்பையும் மீறி ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மற்றொரு பாரிய பேரணிக்கு அவா்கள் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இராணுவ ஜெனரலாக இருந்த பிரயூத் சான் ஓச்சா 2014-இல் நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு செய்து பிரதமர் ஆனதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் பிரதமர் ஓச்சா பதவி விலக வேண்டும், அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் மற்றும் முடியாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாகவே போராட்டம் நடந்து வருகிறது.

எனினும் 68 வயதான தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்ன் இந்தப் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் ஜேர்மனியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக அவர் புதன்கிழமை தாய்லாந்து வந்தார். இதன்போது மன்னர் வந்த காரை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அத்துடன், பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பதவி விலகக் கோரி அவரது அலுவலகம் முன்பும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வன்முறைகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக தலைநகர் பாங்கொக்கில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகங்களும் கடும் செய்தித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் நேற்று வியாழக்கிழமையும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பாங்கொக்கில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றும் பாரிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE