;

Thursday 29th of October 2020 04:06:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
நியூசிலாந்தில் பா.உறுப்பினரான முதல் இலங்கையர்: யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட வனுஷி சாதனை!

நியூசிலாந்தில் பா.உறுப்பினரான முதல் இலங்கையர்: யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட வனுஷி சாதனை!


யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு இலங்கையில் பிறந்த வனுஷி நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான முதல் இலங்கையர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையில் பிறந்த வனுஷி வால்டர் ராஜநாயகம் நியூசிலாந்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அறுதிப் பெறும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி சார்பில் ஓக்லாண்டின் அப்பர் ஹார்பர் தேர்தல் தொகுதியில் வனுஷி போட்டியிட்டார்.

தேசிய கட்சியின் ஜேக் பெஸானட்டை (12,727) வீழ்த்தி வனுஷி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார். அவருக்கு 14,142 வாக்குகள் கிடைத்தன.

இதன்மூலம் இலங்கையில் பிறந்த முதல் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

வனுஷியின் தந்தை வழி கொள்ளுப்பாட்டியான யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட லூயிசா நேசம் சரவணமுத்து அன்றைய பிரித்தானிய - இலங்கையின் சட்டவாக்க சபையான இலங்கை அரச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டவது தமிழ்ப் பெண் ஆவார்.

1932, 1936 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து லூயிசா நேசம் சரவணமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ஆம் ஆண்டுவரை அவர் தனது கொழும்பு வடக்கு பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்திருந்தார்.

தனது ஐந்தாவது வயதில் பெற்றோரான தந்தை மறைந்த ராஜநாயகம் மற்றும் தாய் பிருதிவா ஆகியோருடன் வனுஷி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

வனுஷி மனித உரிமை வழக்கறிஞராவார். சா்வதேச மன்னிப்புச் சபையில் முக்கிய உறுப்பினராகவும் அவர் கடமையாற்றினார்.

வால்டர் என்பவரைத் திருமணம் செய்த 39 வயதான வனுஷி மூன்று பிள்ளைகளின் தாயாவார்.


Category: செய்திகள், புதிது
Tags: நியூசிலாந்து, இலங்கை, வட மாகாணம், கொழும்பு, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE