Tuesday 23rd of April 2024 07:56:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!

யாழில் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!


யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்திருந்தார்.

தொடர்ந்து வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் மற்றும் ஊடகவியலாளர்கள், மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள்.

இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்றவற்றில் பணியாற்றி இருந்தார்.

அந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே நிமல்ராஜன் உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE