Monday 18th of March 2024 09:03:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
தீவிரவாத தாக்குதல் குறித்து 8,000 பொலிஸார்  உள்ளிட்ட 15,000 போ் முன்பே அறிந்திருந்தனர்!

தீவிரவாத தாக்குதல் குறித்து 8,000 பொலிஸார் உள்ளிட்ட 15,000 போ் முன்பே அறிந்திருந்தனர்!


தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் குறித்தும் இலங்கையில் இடம்பெறவிருந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி பெறப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை குறித்து 8000 பொலிஸ் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 15,000 பேருக்கு 2019 ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு முன் அறிவித்து எச்சரிக்கை செய்யப்பட்டதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மால்கம் பேராயர் மல்கம் ரஞ்சித்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையின்போது முன்னாள் இலங்கை புலனாய்வுத் துறை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன ஜனாதிபதி ஆணைக்குழு முன் இந்தக் வாக்குமூலத்தை வழங்கினார்.

மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 8000 காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உளவுத்துறை தகவல்கள் அனுப்பப்பட்டதாக முன்னாள் பொலிஸ்மா அதிபா் முன்னர் சாட்சியமளித்ததாகவும் ஜெயவர்தன தெரிவித்தார்.

புலனாய்வு அமைப்புக்களின் எச்சரிக்கையை அடுத்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது எனவும் அவா் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து 2019 ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து தூதரகங்களும் எச்சரிக்கப்பட்டதாகவும் முன்னாள் புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த தீவிரவாத எச்சரிக்கை அறிக்கை 2019 ஏப்ரல் 7-ஆம் திகதி வரை எனது வசம் இருந்ததால், அதுவரை மட்டுமே நான் பொறுப்பேற்பேன். ஆனால் அதன் பின்னர் அந்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது எனவும் அவா் குறிப்பிட்டார்.

ஜஹ்ரான் ஹாஷிமுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து 2016 முதலே வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் மூலம் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் பொறுப்பில் இருந்தவா்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE