Friday 29th of March 2024 02:32:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
20இற்கு எதிர்ப்பு: யாழ். வல்லையில் தீப்பந்தமேந்தி போராட்டம்!

20இற்கு எதிர்ப்பு: யாழ். வல்லையில் தீப்பந்தமேந்தி போராட்டம்!


நடப்பு பொதுஜன முன்னணி அரசு கொண்டுவந்திருக்கும் அரசமைப்பின் 20ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். வல்லை பாலத்தடியில் தீ பந்தமேந்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கான ஒன்றிணைந்த இளையோர் அணியினரால் இத் தீப்பந்தமேந்திய கவனயீர்ப்பு போராட்டம் சற்று முன்னதாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

20ம் திருத்தத்தை எதிர்க்கும் வகையில் 2020ம் ஆண்டு 20ம் திகதி (இன்று) 20 மணிக்கு (இரவு 8.00 மணிக்கு) வீடுகளில் மின் குமிழ்களை அணைத்துவிட்டு 3 நிமிடங்களுக்கு ஒரு ஒளி விளக்கேற்றுமாறு ஜனநாயகத்துக்கான ஒன்றிணைந்த இளையோர் அணி நேற்றைய தினம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று இரவு 8.00 மணிக்கு யாழ். வரமராட்சி வல்லை பலத்தில் யாழ்-பருத்தித்துறை பிரதான வீதியில் ஒன்று கூடிய குறித்த அணியினர் கைகளில் தீப்பந்தத்தினை ஏந்தி 20ம் திருத்தத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஜனநாயகத்துக்கான ஒன்றிணைந்த இளையோர் அணியைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவக்கையில்,

சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கியதான 20ம் திருத்தத்தை முற்றிலுமாக கைவிட்டு பதிய அரசியலமைப்பை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் முகமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE